அஞ்சனாத்ரி மலை

அனுமனின் பிறந்த இடம்

அஞ்சனாத்ரி மலைகள் (Anjeyanadri Hill) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் அம்பிக்கு அருகிலுள்ள அனுமனஹள்ளியில் ( அனுமனின் கிராமம் என்று பொருள்படும்) அமைந்துள்ளது. இது அனுமன் பிறந்த இடமாகக் கருதபடுகிறது. புராணத்தின்படி, அனுமன் அஞ்சனைக்கு பிறந்தார். இதனால் அனுமன் ஆஞ்சனேயன் என்றும் அழைக்கப்பட்டார். இதனால் அவர் பிறந்த இடம் அஞ்சனாத்திரி என அழைக்கப்பட்டது. (அஞ்சனை மலை). சுமார் 575 படிகள் கொண்ட மலையின் உச்சியில் அனுமனுக்கு கோவில் ஒன்று உள்ளது.

இக்கோயிலில் பாறையில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை உள்ளது. அருகில் இராமர் மற்றும் சீதை மற்றும் அஞ்சனை கோவில்களும் உள்ளன. இந்த இடம் புராணங்களில் கிட்கிந்தை என்று அழைக்கப்பட்டது. [1]

அஞ்சனை மலையிலிருந்து அம்பியின் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Anjanadri Hill : ಕರ್ನಾಟಕದಲ್ಲೇ ಇದೆ ಹನುಮಂತನ ಜನ್ಮಸ್ಥಳ; ಪ್ರಸಿದ್ಧ ತಾಣದ ಕುರಿತು ಇಲ್ಲಿದೆ ಸಂಪೂರ್ಣ ಮಾಹಿತಿ Vistara News" (in கன்னடம்). 2023-07-10. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அஞ்சனை மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனாத்ரி_மலை&oldid=3869120" இலிருந்து மீள்விக்கப்பட்டது