அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

 முக்கியமான உரிமைகளின் பட்டியல்தொகு

 ஐக்கிய நாடுகள் சபையின் உலகலாவிய மனித உரிமைகள் பிரகடனம், ஐ. நாவின்  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை, அல்லது ஐ. நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போனற அமைப்புகள் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட சில அடிப்படை உரிமைகளை கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு:

 ஐக்கிய அமெரிக்கா குடியரசில் சட்டத்தின்  பொருள்தொகு

பல அடிப்படை உரிமைகளும் பரவலாக மனித உரிமைகள் எனக் கருதப்பட்டாலும், "அடிப்படை" என வகைப்படுத்துவது, குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகளுக்கு நீதிமன்றங்கள் பயன்படுத்துகிறது ஆகும். இருந்தாலும் அமெரிக்க அரசாங்கமும், பல்வேறு மாநில அரசாங்கங்களும் சில நிலைமைகளை கட்டுப்படுத்த  இந்த உரிமையை குறைக்கலாம். இது போன்ற சட்ட சூழல்களில், நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகள் என்பதை தீர்மானிக்க வரலாற்று அடிபடையில் ஆய்வு செய்வதன் மூலம் நிர்ணயம் செய்கிறது. மேலும் அவர்களின் பாதுகாப்பு  நீண்ட கால பாரம்பரியத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறதா  என்பதை தீர்மானிப்பதன் மூலம் நீதிமன்றங்கள் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்கிறது. மேலும் அரசுகள் மற்ற உரிமைகளையும் அடிப்படையானது என  உத்திரவாதம் அளிக்கலாம். அதாவது அரசுகள் அதை அடிப்படை உரிமைகளாக சேர்க்கலாம். சட்டரீதியான செயல்முறைகளால் அடிப்படை உரிமைகளை குறைக்கவோ அல்லது மீறவோ முடியாது. இது போன்ற எந்த முயற்சியும் சாவல்  விடும் அளவிற்கு இருந்தால், நீதிமன்றத்தில் "கடுமையான கண்காணிப்பு" பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.

குறிப்பிட்ட அதிகார வரம்புகள்தொகு

கனடாதொகு

கனடாவில், உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் சாசனம் நான்கு அடிப்படை சுதந்திரங்களை கோடிட்டுக்காட்டுகிறது.[8] இந்த சுதந்திரம் என்பது,

ஐரோப்பிய ஒன்றியம்தொகு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒத்த கோட்பாடு கிடையாது. (ஐரோப்பிய சட்டத்தில்  நீதிமன்ற பரிசீலனைக்கு அதிக கட்டுபாடு உள்ளது). இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய சட்டம் பல மனித உரிமைகளை அங்கீகரிக்கிறது மற்றும் பல்வேறு வழிகளில் அவற்றை பாதுகாக்கவும் செய்கிறது.

மேலும் காண்க: கோபன்ஹேகன் அளவுகோல், மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய மாநாடு  போன்றவைகள் வலியுறுத்துவது,  ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இறுதி முறையான அதிகார வரம்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டும் என்கிறது.

இந்தியாதொகு

இந்திய அடிப்படை உரிமைகள் பல தனித்தன்மைகளை பெற்றிருப்பதுடன், அமெரிக்க உரிமைகள் மசோதாவில் அடங்கியுள்ள உரிமைகளிலிருந்து வேறுபடுகிறது. இந்தியாவின் அடிப்படை உரிமையானது ஐக்கிய நாடுகளின் அடிப்படைகளை விட விரிவானது. உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் உரிமை மாசோதா (முதல் பத்து திருத்தங்கள்) சில உரிமைகளை மட்டுமே கூறுகிறது. நீதித்துறை மறுஆய்வு செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இந்த அடிப்படை உரிமைகள்  மீதான வரம்புகளை முடிவு செய்கிறது. 1976-இல் சொத்துரிமையை அடிப்படை உரிமை பட்டியலிருந்து நீக்கப்பட்டு, சாதாரன சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்தியாவின்  6 முக்கியமான அடிப்படை உரிமைகள்:

 • சமத்துவ உரிமை
 • சுதந்திர உரிமை, இதில் பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை, அமைதியாக ஆயுதங்களின்றிக் கூடும் உரிமை, சங்கங்கள் அல்லது கூட்டமைவுகள் அமைக்கும் உரிமை, இந்திய ஆட்சிநிலவரை எங்கணும் தடையின்றிச் சென்று வரும் உரிமை, இந்திய ஆட்சிநிலவைரயின் எப்பகுதியிலும் குடியிருப்பதற்கும் நிலையாகக் குடியமர்வதற்குமான உரிமை, விழைதொழில் எதனையும் புரிந்து வருவதற்கும் அல்லது வாழ்தொழில், வணிகத்தொழில் அல்லது ஆகுதொழில் எதனையும் நடத்தி வருவதற்கும்  உரிமை
 • சமயச் சுதந்திரத்திற்கான உரிமை
 • சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை
 • பண்பாடு மற்றும் கல்வி உரிமை
 • அரசியலமைப்பு மூலம் தீர்வு காணும் உரிமை

2002 இல் இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் சட்டப்பிரிவு 21A வில் கல்வி உரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உரிமை சமீபத்தில் அதாவது 2010 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த உரிமை செயல்படுத்தியது.

2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அடிப்படை உரிமைகளின் பட்டியலில் அண்மையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

 • தனி உரிமை.

ஐக்கிய நாடுகள்தொகு

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் மூலம், அமொிக்க அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அந்த உரிமைகள் அமெரிக்க உச்ச நீதிமன்றம் "அடிப்படை" என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற கூற்றுப்படி, எண்ணற்ற  உரிமைகள் மிகவும் அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றும்அத்தகைய உரிமையை கட்டுப்படுத்தும் எந்த சட்டமும் ஒரு கட்டாயமான அரச நோக்கத்திற்காக சேவை செய்வதோடு, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறுகிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றது.

 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உரிமைகள் மசோதாவின்  அசல் விளக்கம், மத்திய அரசால் மட்டுமே இதை கட்டுப்படுத்தபப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரோன் எதிர் பால்டிமோர் ஆகியோர் உரிமை மசோதா மாநிலங்களுக்கு  பொருந்தாது என தீர்ப்பளித்தது. உள்நாட்டு போர் மறுசீரமைக்குப் பின், 1869 இல் 14 வது திருத்தத்தின் படி, இந்நிலைமை  மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றது. அதுமட்டுமின்றி அனைத்து அமெரிக்க மக்களுக்கும் அரசியலமைப்பு பொருந்தும் என்றது. 1873 இல் உச்ச நீதிமன்றம் 14 வது  அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அமெரிக்காவின் அனைத்து  மக்களுக்கும்  அனைத்து "சலுகைகள் மற்றும் குடியேற்றங்கள்" என்ற அடைமொழியை கொடுத்து உத்தரவாதமளித்தது. இந்த தீர்ப்பு வீடுகளில் தொடர்ச்சியாக நடந்த  படுகொலை சார்ந்த வழக்குளில் கொடுத்தது. இந்த முடிவால் பிந்தைய விடுதலைக்கு  பின் மற்றவர்கள் இனப் பாகுபாடுக்கு அனுமதிக்கவில்லை.

பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வீடுகளில் நடந்த தொடர்  படுகொலைகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சில வரம்புகளுக்கு உட்பட்டு  ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்: அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு எனும் கருத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டக் கோட்பாட்டின் கீழ், நீதிமன்றம் மீதமுள்ள 14 வது திருத்தம்  சமமான பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தின் தனித்துவமான கூறுகளை "உள்ளடக்கியது". போன்றவற்றின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தியது. "டௌஸ் செயல்முறை விதிமுறைகளின் கீழ் அடிப்படைத் தன்மையை நிர்ணயிப்பதற்கு இந்த சோதனை பொதுவாக வெளிப்படையாக உள்ளது, இது சரியான உத்தரவு " 'கட்டளையிடப்பட்ட  சுதந்திரத்தின் கருத்தில் உள்நோக்கத்துடன்', அல்லது 'இந்த நாட்டினரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது."பக்கம் 267 லூட்ஸ் வி நகரத்தை - நியுயாா்க் நகரம், 899 F. 2d 255 - ஐக்கிய அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், 3 வது சர்க்யூட், 1990.

இந்த இயக்கம் ஒரு தொடர்ச்சியான செயல்முறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும், ஒவ்வொருடைய  உரிமையும் உரிமைகள் சட்டத்தின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.இந்த செயலானது அரை நூற்றாண்டிற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது, முதல் திருத்தத்தின் முதல் சொற்களானது 1925 ஆம் ஆண்டில் ஜிட்லொவில் நியூயார்க்கில் இணைக்கப்பட்டது. மிகவும் முக்கியமான   இரண்டாவது திருத்தம் அண்மையில் திருத்தப்பட்டது. இதுசொந்த சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரியை மெக்டொனால்ட் வி என்பவருக்கு சிகாகோவில், 2010 இல் வழங்கியது.

திருத்தப்பட்ட அனைத்திலும் எல்லாம் உட்பிாிவுகளையும் சேர்க்கப்படவில்லை. உதாரணமாக, ஐந்தாவது திருத்தத்தின் குற்றச்சாட்டுக்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவை இல்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.எதிர்கால வழக்குகள் மாநிலங்களுக்கு எதிரான உரிமைகள் சட்டத்தில் கூடுதல் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

உரிமைகள் பில் குறிப்பாக குறிப்பிடப்பட்ட உரிமைகளை பட்டியலிடுகிறது. உச்சநீதிமன்றம், அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத பல அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலம் அடிப்படை உரிமைகளை விரிவாக்கியுள்ளது. ஆனால் இதில் மட்டுமில்லை::

 • உள்நாட்டில் பயணம் மேற்கொள்வதற்கான உரிமை
 • பெற்றோா் குழந்தைகளுக்குமான உரிமை[9]
 • கடற்கொள்ளையரிடமிருந்து உயர் கடல்களில் பாதுகாப்பு
 • தனியுரிமைக்கான உரிமை
  [10]
 • திருமண உரிமை [11]
 • சுய பாதுகாப்பு உரிமை

அரசாங்கத்தின் எந்தவொரு கொள்கைகளும் அல்லது திட்டங்களும் இந்த உாிமைகளை கட்டுபடுத்தும் போது, கடுமையான கண்காணிப்புடன் மதிப்பீடு செய்கின்றன. அனைவருக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அது கணிசமான நடைமுறைப்பட்ட செயல்முறையாக கருதப்படுகிறது ஆனால், தனிநபர்களுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டால்,  அது சமமான பாதுகாப்புக்கான பிரச்சினையாக கருதப்படுகிறது. இருப்பினும், சமமான பாதுகாப்பை மீறுகின்ற அதே சமயத்தில், அடிப்படை உரிமைகளை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் கடுமையான கண்காணிப்புக்கான மிகத் தெளிவான மதிப்பீடு அல்லது குறைந்தது பகுத்தறிவான செயல்பாடுகளையும் செய்தல் வேண்டும்.

லோச்நெர் சகாப்தத்தின் போது, சுதந்திர ஒப்பந்த உரிமையை அடிப்படையாகக் கருதப்பட்டது, மேலும் அந்த உரிமை மீதான கட்டுப்பாடுகள் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டன. 1937 உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெஸ்ட் கோஸ்ட் ஹோட்டல் கோ.வி.பிரரிஷ் தீர்ப்பிற்குப் பிறகு, ஒப்பந்த  உரிமையைக் கருத்தில் கொண்டு கணிசமான முறையான செயல்முறையின் சூழலில் கணிசமான அளவு முக்கியத்துவம் பெற்றது.

மேலும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படை_உரிமைகள்&oldid=3112603" இருந்து மீள்விக்கப்பட்டது