அடி உடுக்கு

அடி உடுக்கு அல்லது அடி உடுக்கை என்பது தமிழக மலைவாழ் மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் விதத்தில் மூங்கிலால் உருவாக்கிக்கொண்ட ஒரு ஒலி எழுப்பும் பாரம்பரிய கருவியாகும். இந்தக் கருவி யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகளிடம் இருந்து மலைவாழ் மக்களைச் சிறப்பாக பாதுகாக்கிறது.

அமைப்பு தொகு

இந்த அடி உடுக்கை இரண்டு அடி நீள மூங்கிலில் இரு புறமும் வில் போன்று கட்டப்பட்டிருக்கும் வலுவான நூல் இழையில் ஒரு குச்சி இணைக்கப்பட்டிருக்கும். அவற்றை இரு புறமும் அசைக்கும்போது மூங்கிலில் படும் குச்சி ஓசை எழுப்புகிறது. இது 30 மீட்டர் வரை ஒலி எழுப்பும் தன்மையுள்ளது. இதனால் வன விலங்குகள் எதுவும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை நெருங்காது. செலவு ஏதுமின்றி சாதாரண மூங்கிலில் செய்யப்படும் இக்கருவிகள், மலைவாழ் மக்களை பாதுகாத்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த மூங்கில் கருவிகளைப் பழமை அழியாமல் ஆவணப்படுத்தும் முயற்சியை ஐ.நா. கலாச்சார அமைப்பான யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் அடி உடுக்கு, குடுக்கை கருவிகள்: ஐ.நா. கலாச்சார அமைப்பு ஆவணப்படுத்துகிறது". செய்திக் கட்டுரை. தி இந்து. 8 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_உடுக்கு&oldid=3576403" இலிருந்து மீள்விக்கப்பட்டது