அடுத்தாத்து ஆல்பர்ட்

1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்

அடுத்தாத்து ஆல்பர்ட் (Aduthathu Albert) இயக்குநர் ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபு, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. என். இரங்கராஜன் தயாரித்த இப்படம் இளையராஜாவின் இசையில், ஜூலை 12, 1985 அன்று வெளியிடப்பட்டது. [1] [2]

அடுத்தாத்து ஆல்பர்ட்
படிமம்:Aduthathu Albert.jpg
இயக்கம்ஜி. என். இரங்கராஜன்
தயாரிப்புஜி. என். இரங்கராஜன்
திரைக்கதைஜி. என். இரங்கராஜன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. டி. பிரசாந்த்
படத்தொகுப்புகே. ஆர். இராமலிங்கம்
கலையகம்குமரவேல் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 12, 1985 (1985-07-12)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் ( பிரபு ) இராதா ( ஊர்வசி ) என்ற பிராமணப் பெண்ணை காரணமேயில்லாமல் வெறுக்கிறான். ஆல்பர்ட்டின் சகோதரி மேரியும் இராதாவின் சகோதரன் இராஜாவும் காதலிக்கிறார்கள். ஆல்பர்ட் பின்னர் காதலர்களுக்கு உதவ முடிவு செய்கிறான். ஆனா, குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக காதலர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆல்பர்ட்டும் இராதாவும் சேர்ந்து தங்கள் குடும்பத்தினருக்கு ஒரு பாடம் கற்பிக்க தாங்களும் இறந்து விட்டதாக ஒரு நாடகம் நடத்துகிறார்கள். இறுதியில் இவர்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள்.

நடிகர்கள்தொகு

ஒலிப்பதிவுதொகு

அடுத்தாத்து ஆல்பர்ட்
ஒலிச்சுவடு
வெளியீடு1985
ஒலிப்பதிவு1985
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்23:06
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இப்படத்தின் இசையை இசையமைப்பாளர் இளையராஜா மேற்கொண்டிருந்தார். 1985 ஆம் ஆண்டில் வெளியான இந்த ஒலிப்பதிவில், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், பொன்னருவி மற்றும் காதல் மதி ஆகியோரால் எழுதப்பட்ட பாடல்களுடன் 5 தடங்கள் உள்ளன. [3]

மேற்கோள்கள்தொகு

  1. "Filmography of aduthathu albert". cinesouth.com.
  2. "Aduthathu Albert". popcorn.oneindia.in. மூல முகவரியிலிருந்து 2013-02-17 அன்று பரணிடப்பட்டது.
  3. "Aduthathu Albert". thiraipaadal.com.

வெளி இணைப்புகள்தொகு