அடையாறு போர்

அடையாறு போர் என்பது பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கும், ஆற்காடு நவாப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போராகும். இந்த போர் அக்டோபர் 29, 1746 ஆண்டு நடைபெற்றது.

பின்னணி

தொகு

பிரெஞ்சு படை மெட்ராஸ் போரில் வெற்றி பெற்று மெட்ராஸ் நகரம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆங்கிலேயப் படைகள் ஆற்காடு நவாபின் நண்பர்கள். எனவே மெட்ராசை பிரெஞ்சு படையிடம் இருந்து மீட்க தனது படையை தனது மகன் தலைமையில் மெட்ராஸ் நோக்கி அனுப்பினார். அவரது மகன் பெயர் மஹாபுஸ் கான்.

போர்

தொகு

நவாப் படை சாந்தோம் பகுதியில் நிலை கொண்டு இருந்தது. பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்ட 200 பேர் கொண்ட பிரெஞ்சு படை மெட்ராஸ் கோட்டையை நோக்கி புறப்பட்டது. இந்த படையை கேப்டன் பாராடிஸ் என்பவர் தலைமை தாங்கினார்.

அடையாறு ஆற்றங்கரையில் குவிப்பில் தீவு வரை வந்து விட்ட பாராடிஸின் படைக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்தும் இதே அளவு கொண்ட ஒரு பிரெஞ்சு படை நவாபை எதிர் கொள்ள வருவதாக தகவல் கிடைத்தது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து வரும் புறப்படும் படைக்கு டி ல டூர் என்பவர் தலைமை தாங்கினார்.

கேப்டன் பாராடிஸ் தனது கட்டுகோப்பான படையின் துப்பாக்கி சுடுதலின் மூலமும், கத்தி சண்டை மூலமும் நவாபின் ஒழுங்கற்ற படையை எளிதில் தோற்கடித்தார் . 200 பேரே கொண்ட பிரெஞ்சு படை 10,000 பேர் பலம் கொண்ட நவாப் படையை வென்ற இந்த போர் ஒரே நாளில் நடந்து முடிந்தது. இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு டி ல டூர் படை போர் முடிந்த பின்னரே போர்க்களத்துக்கு வந்து சேர்ந்தது. [1]

மேற்கோள்கள்

தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு_போர்&oldid=2811764" இலிருந்து மீள்விக்கப்பட்டது