அட்டவால்பா

இன்காவின் 15வது பேரரசர்

அட்டவால்பா (Atahualpa, சு. 1502 – 26–29 சூலை 1533[5]) என்பவர் இன்காவின் கடைசி பேரரசராவார். இன்கா பேரரசை எசுபானியர்கள் வெற்றிகொண்டபிறகு அவர்களால் இவர் கொல்லபட்டார்.

அட்டவால்பா
Atahualpa
குஸ்கோ பள்ளியின் அறியப்படாத கலைஞரின் அட்டவால்பாவின் உருவப்படம். தற்போது ஜெர்மனியின் பெர்லினில் உள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது
இன்காவின் பேரரசர்
ஆட்சிக்காலம்1532–1533
Self-installationஏப்ரல் 1532
முன்னையவர்Huáscar
பின்னையவர்Túpac Huallpa (as puppet Sapa Inca of the இன்கா பேரரசு)
பிறப்புசு. 1502
விவாதத்துக்குரியது: குசுக்கோ, கித்தோ[1] or Caranqui [2][3]
இறப்பு26 சூலை 1533 (31 வயதில்)[4]
கஜாமர்கா, தவண்டின்சுயு
புதைத்த இடம்29 ஆகத்து 1533
கஜாமர்கா, தவண்டின்சுயு
இராணிகோயா அசர்பாய் (அரசி), குக்சிரிமாய் ஒக்லோ (இரண்டாவது மனைவி)
கெச்வாAtawallpa
அரசமரபுஹனான் குஸ்குவ்
தந்தைஊய்னா கபாக் – இன்கா பேரரசர்
தாய்விவாதத்துக்குரியது:
டோக்டோ ஆக்லோ கோகா
பச்சா டுசிசேலா
டூபக் பல்லா

அட்டவால்பா பேரரசர் ஊய்னா கபாக்கின் மகன் ஆவார். அவர் 1525 ஆம் ஆண்டில் அவரும் அவரது வாரிசான நினன் குயோச்சியும் பெரியம்மை பெருந்தொற்றால் அடுத்தடுத்து இறந்தார். அட்டவால்பா ஆரம்பத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உவாஸ்கரை புதிய பேரரசராக ஏற்றுக்கொண்டார். அவர் இவரைப் பேரரசின் வடக்கே உள்ள கித்தோவின் ஆளுநராக நியமித்தார். அவர்களுக்கிடையே உறவு அடுத்த சில ஆண்டுகளில் மோசமடைந்தது. 1529 முதல் 1532 வரை, அவர்கள் இன்கா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர். இதில் அட்டவால்பாவின் படைகள் உவாஸ்காரை தோற்கடித்தது. இதையடுத்து அட்டவால்பா ஆட்சியை கைப்பற்றினார்.

அட்டவால்பா வெற்றிபெற்ற அதே காலக்கட்டத்தில், பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான எசுபானிய வெற்றி வீரர் குழுவினர் இப்பகுதிக்கு வந்தனர். நவம்பரில், அவர்கள் கஜாமார்காவில் பதுங்கியிருந்து அட்டவால்பாவைச் சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட அட்டவால்பாவை விடுவிவிப்பதற்காக பெரும் தொகை கேட்கப்பட்டது. மேலும் அட்டவால்பாவை தூக்கிலிட ஏற்பாடு செய்தார். மீட்புத் தொகையைப் பெற்ற பிறகு, எசுபானியர்கள் அட்டவால்பா மீது தேசத்துரோகம், எசுபானிய அரசுக்கு எதிரான சதி, உவாஸ்கரின் கொலை ஆகிய குற்றங்களை சுமத்தினர். இந்தக் குற்றங்களின் பேரில் இவரை விசாரணைக்கு உட்படுத்தினர். முடிவில் இவரை எரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால், ஞானஸ்நானம் பெற்ற பிறகு, 1533 சூலை 1533 இல் இவர் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்டார்.

இவரின் வாரிசுகள் எசுபானியாவுக்கு அடங்கியோ அல்லது கிளர்ச்சி செய்தோ பேரரசர் பட்டத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் யாராலும் ஒப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. Kauffmann Doig 1970.
  2. Hewett 1968, ப. 171.
  3. Veatch 1917, ப. 60.
  4. Hemming 1993, ப. 557, footnote 78.
  5. "Atahuallpa | Biography & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டவால்பா&oldid=3674647" இலிருந்து மீள்விக்கப்பட்டது