அட்டாபாத் ஏரி

பாக்கித்தானிலுள்ள ஏரி

அட்டாபாத் ஏரி கோஜல் ( Attabad Lake Gojal ) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானின் கோஜல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும் . 2010 ஜனவரியில் அட்டாபாத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நிலச்சரிவின் காரணமாக இது உருவானது.[1] இந்த ஏரி, படகு சவாரிக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெட் பனிச்சறுக்கு, மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் இங்கு நடைபெறுகிறது.

அட்டாபாத் ஏரி கோஜல்
கோஜல் ஏரி
ஜூலை 2017 இல் ஏரியின் புகைப்படம்
அட்டாபாத் ஏரி கோஜல் is located in Gilgit Baltistan
அட்டாபாத் ஏரி கோஜல்
அட்டாபாத் ஏரி கோஜல்
அட்டாபாத் ஏரி கோஜல் is located in பாக்கித்தான்
அட்டாபாத் ஏரி கோஜல்
அட்டாபாத் ஏரி கோஜல்
அமைவிடம்கோஜல், கில்கிட்−பால்டிஸ்தான், பாக்கித்தான்
ஆள்கூறுகள்36°20′13″N 74°52′3″E / 36.33694°N 74.86750°E / 36.33694; 74.86750
முதன்மை வரத்துகன்சா ஆறு, 79 m3/s (2,800 cu ft/s), 26 மே 2010
முதன்மை வெளியேற்றம்காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கோஜல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் 100 m3/s (3,700 cu ft/s), 4 ஜூன் 2010
அதிகபட்ச நீளம்21 km (13 mi)
அதிகபட்ச ஆழம்109 m (358 அடி)
நீர்க் கனவளவு410,000,000 m3 (330,000 acre⋅ft), 26 மே 2010
குடியேற்றங்கள்கோஜல், கன்சா பள்ளத்தாக்கு
Map
இந்த ஏரி உள்ளூர் நெடுஞ்சாலையை மூழ்கடித்தது, செப்டம்பர் 2015 இல் போக்குவரத்துக்காக புதிய சாலை சுரங்கப்பாதை திறக்கப்படும் வரை அனைத்துப் பொருட்களையும் படகுகளில் அனுப்ப வேண்டியிருந்தது.
பாக்கித்தானின் கில்கிட் அருகே உள்ள அட்டாபாத் ஏரி.

உருவாக்கம்

தொகு

ஏரியின் தோற்றம் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள கன்சா பள்ளத்தாக்கிற்குள் உள்ள அட்டாபாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து தோன்றியது. ஜனவரி 4, 2010 அன்று, கரிமாபாத்தின் கிழக்கே ஏறக்குறைய 14 கிலோமீட்டர் (9 மைல்) மேல்புறத்தில் ஏற்பட்ட கணிசமான நிலச்சரிவு, இந்த நீர்நிலையை உருவாக்க வழிவகுத்தது. நிலச்சரிவு இருபது நபர்களின் உயிர்களைக் கொன்றது. மேலும், ஐந்து மாதங்களுக்கு கன்சா ஆற்றின் ஓட்டத்தைத் தடை செய்தது. இதன் விளைவாக ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களிலிருந்து சுமார் 6,000 குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்தனர். மேலும் 25,000 நபர்கள் தரைவழிப் போக்குவரத்து வழித்தடங்களின் இடையூறு காரணமாக சிக்கித் தவித்தனர்.  இப்பகுதியில் உள்ள முக்கிய போக்குவரத்துப் பாதையான காரகோரம் நெடுஞ்சாலையின் 19 கிலோமீட்டர் (12 மைல்) அளவுக்கும் அதிகமான பரப்பளவை ஏரி மூழ்கடித்தது. ஜூன், 2010 முதல் வாரத்தில் இந்த ஏரி 21 கிலோமீட்டர் (13 மை) நீளத்தையும் 100 மீட்டர் (330 அடி) ஆழத்தையும் அடைந்தது. நிலச்சரிவு அணையின் மீது பாயத் தொடங்கியபோது, சிசுகாட்டின் கீழ் பகுதி முழுவதுமாக மூழ்கி குல்மிட் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது.. 170க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 120 கடைகள் வெள்ளத்தால் மூழ்கின. காரகோரம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையால், குடியிருப்புவாசிகளுக்கு உணவு மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஜூன் 4, 2010க்குள், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் 100 மீ3/வி (3,700 கனஅடி/வி) ஆக அதிகரித்தது.. [2] நீர் மட்டங்களின் அதிகரிப்பு ஜூன் 18, 2010 வரை நீடித்தது. மோசமான வானிலை தொடர்ந்ததாலும், கன்சாவிற்கு எவ்விதப் போக்குவரத்தும் தொடங்க முடியாததாலும் உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது. [3]

நிலச்சரிவின் பின்விளைவுகள்

தொகு

நிலச்சரிவு மற்றும் ஏரி விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். [4]

கன்சா ஆற்றின் அணை நிரம்பியதையடுத்து, தடுப்பணைக்கு வடக்கே உள்ள ஐந்து கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அயீனாபாத் என்ற கிராமம் முற்றிலும் நீரில் மூழ்கியது. மற்றொரு கிராமமான சிசுகாட்டின் முக்கிய பகுதிகளும் நீரில் மூழ்கின. கோஜல் பள்ளத்தாக்கின் தலைமையகமாகவும் செயல்படும் குல்மிட் கிராமத்தின் சுமார் 40% நீரில் மூழ்கியது. கோஜாலின் உசைனி மற்றும் குல்கின் கிராமங்களில் உள்ள கணிசமான பகுதிகளும் நீரில் மூழ்கின. மத்திய கன்சா மற்றும் கோஜல் பள்ளத்தாக்குகளின் (மேல் கன்சா) முழு மக்களும், 25,000 நபர்கள் வரை, ஏரி உருவானதன் விளைவாக பாதிக்கப்பட்டனர் [5] .

அட்டாபாத் ஏரியை பாக்கித்தானின் முன்னாள் பிரதமர்கள் யூசஃப் ரசா கிலானி மற்றும் நவாஸ் ஷெரீப் மற்றும் பஞ்சாப் முதல்வர் செபாஷ் செரீப் ஆகியோர் பார்வையிட்டனர். பஞ்சாப் அரசிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.100 மில்லியன் உதவியும், நிலச்சரிவில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.0.5 மில்லியன் உதவியும் வழங்குவதாக முதல்வர் ஷெரீப் அறிவித்தார்.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hayat, Tahir; I., Khan; Shah, Het; Qureshi, Mohsin; Karamat, Shazia; I, Towhata (2010-01-01). "Attabad Landslide - Dam disaster in Pakistan 2010". Bulletin of International Society of Soil Mechanics and Geotechnical Engineering 4: 21–31. https://www.researchgate.net/publication/236899339. 
  2. Dave Petley (4 June 2010), "Attabad spillway flow update of 08:30 this morning", Hunza Blog, Durham University, England, பார்க்கப்பட்ட நாள் 26 November 2015
  3. "Water level rising continuously in Attabad Lake". Dawn. 18 June 2010. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
  4. "ONLINE - International News Network". 2011-09-28. Archived from the original on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
  5. "Gojal Valley Inflicted by Devastation of Natural Disaster" (PDF). Archived from the original (PDF) on 2 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-10.
  6. "Attabad 'water bomb' countdown" (in ஆங்கிலம்). 2010-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டாபாத்_ஏரி&oldid=3855818" இலிருந்து மீள்விக்கப்பட்டது