அட்ல தத்தே
அட்ல தத்தே என்பது ஆந்திராவின் திருமணமாகாத மற்றும் திருமணமான இந்துப் பெண்களால், நல்ல கணவனைப் பெறுவதற்காக அல்லது தங்கள் கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகையாகும் . இது தெலுங்கு நாட்காட்டியின் அஸ்வியுஜா மாதத்தில் முழு நிலவிலிருந்து 3 வது இரவில் நிகழ்கிறது. கிரிகோரியன் நாட்காட்டியில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் விழுகிறது.[1] இது தெலுங்கில், கரக சதுர்த்தி கொண்டாட்டத்திற்குச் சமமானதாகும். கரக சதுர்த்தி வட இந்தியப் பெண்களால் மறுநாள் கொண்டாடப்படுகிறது.
அட்லு தத்தே | |
---|---|
நடத்துபவர்கள் | தெலுங்கு இந்துப் பெண்கள் |
வகை | கவுரி தேவி பண்டிகை |
காலம் | தெலுஙின் அஸ்வியுஜா மாதம் |
நாள் | முழுநிலவிலிருந்து 3ம் நாள் |
நிகழ்வு | வருடாந்திரம் |
சடங்கு
தொகுதெலுங்குப் பெண்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் முழுதும்உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் அட்லா தத்தேவை நினைவுகூருகிறார்கள். பெண்கள் மாலையில் பூஜை செய்து, சந்திரனைப் பார்த்து சிறிய அட்லுவைச்(தோசை) சாப்பிட்டு விரதம் முடிப்பார்கள்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சில இடங்களில் உள்ள பழக்கவழக்கங்கள்;
இந்த விழா பெண்கள் மற்றும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறது.இந்த நாளை முன்னிட்டு, அவர்கள் தங்கள் உள்ளங்கையில் மருதாணி பூசுவார்கள். பெண்களும் குழந்தைகளும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, தயிர் மற்றும் கோங்குரா சட்னியுடன் சுத்தி (இரவுக்கு முன் சமைத்த அரிசி) சாப்பிடுவார்கள். திருமணமாகாத பெண்களும் குழந்தைகளும் சூரியன் உதிக்கும் வரை சுட்டி சாப்பிட்டுவிட்டு அட்ல தத்தே பாடலைப் பாடி தெருக்களில் விளையாடுவார்கள். மக்கள் ஊஞ்சலாடுகிறார்கள். மக்கள் சூரிய உதயத்திற்குப் பிறகு அருகிலுள்ள குளம் அல்லது ஏரியில் சந்திரனைப் பார்த்து அந்நாளை வரவேற்கிறார்கள். பூதரேகுலு (அரிசி மாவு, வெல்லம் மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்பு), குடுமுழு (கௌரி தேவிக்கு 5) (உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தலா 5 மற்றும் 4 குடுமுளில் 4க்கு மேல் ஒன்றை வைத்து தீபம் செய்து அதையே தீபம் ஏற்றி வைத்து பூஜைக்கு பிறகு சாப்பிடுவது),11 சிறிய தோசைகள் (ஒவ்வொருவருக்கும்), கைக்கான தோரணம் (அட்ல தத்தேவிற்கு 11 முடிச்சுகள், உண்ட்ரல்லா தத்தேவிற்கு 5 முடிச்சுகள்கொண்ட தோரணம்) ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.[2]
இந்த நாளில், சிலர் அட்லுவை தயாரித்து கவுரி தேவிக்கு காணிக்கையாக வைத்து, பின்னர் அவற்றை தானமாக உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு விநியோகம் செய்யும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு முத்தாய்ப்புக்கும் இந்தப் பெண்கள்/உறவினர்கள் இந்தப் பூஜை செய்பவருடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள். விழாவில் ஏற்கனவே இந்த தானம் எடுத்த 11 பெண்கள் இருப்பர். பொதுவாக அப்பாவின் சகோதரி இந்த தானம் எடுத்தால் சடங்குகள் தொடர்கின்றன. இந்த 11 பெண்களுக்கும் 11 அட்லுவையும் தீபத்தையும் (அரிசி மாவு மற்றும் நெய்யால் செய்து கௌரி தேவியின் முன் ஏற்றி) பெறுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் புடவையின் முந்தியில் தானம் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh". தி இந்து. 2007-10-29. Archived from the original on 30 October 2007. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012.
- ↑ https://timesofindia.indiatimes.com/religion/festivals/atla-tadde-2022-date-story-rituals-and-significance/articleshow/94780585.cms