அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம்

அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் (Saha Institute of Nuclear Physics, SINP) இந்தியாவின் கொல்கத்தாவின் சால்ட் லேக் சிடி எனப்படும் பிதான் நகரில் அமைந்துள்ள ஓர் இயற்பியல் ஆய்வு நிறுவனமாகும். இங்கு அடிப்படை ஆய்வும் இயற்பியல் மற்றும் உயிர் இயற்பியல் துறைகளில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியலாளர் மேகநாத சாஃகாவின் நினைவாக இந்த நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.

அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம்
Saha Institute of Nuclear Physics
வகைஆராய்ச்சி நிறுவனம்
உருவாக்கம்1949
பணிப்பாளர்பேரா. மிலன் கே. சன்யால்
கல்வி பணியாளர்
120
மாணவர்கள்170
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்ஊரகம்
இணையதளம்www.saha.ac.in

இந்திய அணுவாற்றல் துறையின் கீழியங்கும் இந்த நிறுவனம் 1950ஆம் ஆண்டில் மேகநாத் சாஃகாவால் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் சைக்ளோட்ரான், முதல் இலத்திரன் நுண்நோக்கி மற்றும் முதல் காந்த அலைக்கற்றைமானி உருவாக்கிய பெருமையை உடையது. இதன் பொன்விழா கொண்டாட்டங்கள் ஆகத்து 21, 2011ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நிறைவடைந்தன.[1]

வரலாறு

தொகு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கீழ் பலித் ஆய்வுகம் இயங்கி வந்தது.1938ஆம் ஆண்டு இந்த ஆய்வகத்தின் பேராசிரியராக மேகநாத சாஃகா பொறுப்பேற்றார். அணுக்கரு இயற்பியலின் வளர்முக சிறப்பினை கருத்தில் கொண்டு சாஃகா அணுக்கரு இயற்பியலை பாடதிட்டத்தில் சேர்த்து சில அறிவியல் உபகரணங்களையும் நிறுவினார். விரைவிலேயே ஓர் சிறிய அளவிலான சைக்கிளத்திரனின் தேவை உணரப்பட்டது. ஜவஹர்லால் நேருவின் உதவியில் ஜே. ஆர். டி. டாட்டாவின் புரவலில் 1949ஆம் ஆண்டு ஆசார்யா பிரபுல்ல சந்திரா சாலையில் அணுக்கரு இயற்பியலுக்கான நிறுவனத்திற்கான அடிக்கல் இடப்பட்டது. 1950ஆம் ஆண்டில் கட்டிடம் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரியால் திறக்கப்பட்டது. 1980களில் இந்த நிறுவனம் தற்போது இயங்கும் பிதான் நகர் புதுக்கட்டிடத்திற்கு மாறியது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5379935[தொடர்பிழந்த இணைப்பு] எம்எஸ்என் செய்தி

வெளியிணைப்புகள்

தொகு