அதீக் உசேன் கான்

இந்துஸ்தானி கவ்வால் பாடகர்

உஸ்தாத் அதீக் ஹுசைன் கான் பந்தனவாசி அல்-ஹஷ்மி கவ்வால் ( بنده نوازى قوال ) (பிறப்பு 1980) ஒரு இந்துஸ்தானி கவ்வால் பாடகர் ஆவார்.

அவர் இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தார். அவரது ஐந்து வயதிலிருந்தே தனது தந்தையிடமிருந்து இந்திய பாரம்பரிய இசையில் ( ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத் ) பயிற்சியைத் தொடங்கினார் மற்றும் அவருடன் கவ்வாலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அஅவரது தந்தை உஸ்தாத் இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசியும் ஒரு கவ்வாலி இசை பாடகராக இருந்தபடியால் அவரிடமிருந்தே பன்டிஷ், தும்ரி, பஜன் தரனா கஜல் மற்றும் பிற நாட்டுப்புற பாரம்பரிய பாடலின் பல்வேறு வகைகளைக் கற்றுக்கொண்டார்.

அவரது குரல் மற்றும் பாணி அவரது தந்தையை ஒத்திருக்கிறது. இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள பல செய்தித்தாள்கள் அவரது திறமையைப் பாராட்டியுள்ளன.[1] சூஃபி கவ்வாலி இசை நிகழ்ச்சிகளுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவரது கவ்வாலி குழு பந்தனவாசி கவ்வால் என்று அழைக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டமான ஜாஷ்ன்-இ-டில்லி   என்ற உருது பாரம்பரிய விழாவில் அவர் இசைநிகழ்ச்சியை நிகழ்த்தினார்.[2][3][4][5][6] அவரது மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் ஹஸ்ரத் ரூமி, இந்தியாவின் சூஃபி திருவிழா மற்றும் தலாய் லாமா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இசை விழா ஆகியவையாகும்..

1998 ஆம் ஆண்டில், பந்தனவாசி கவ்வால் மகாராஷ்டிரா கலை மற்றும் கலாச்சாரத் துறையிலிருந்து சுஷில்குமார் ஷிண்டே என்பவரால் சங்கீத ரத்னா சம்மான் பெற்றார்.[7]

குடும்ப பின்னணி

தொகு

அதீக் ஹுசைன் கான் குவாலியர் கரானா உஸ்தாத் ஹட்டு ஹசு கானின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர், அதீக் ஹுசைன் கானின் மூதாதையர் மற்றும் உஸ்தாத் குர்பான் ஹுசைன் கானின் பேரன். அதீக்கின் தாய்வழி தாத்தா டெல்லி கரானாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ அஜீஸ் அகமது கான் வார்சி ஆவார். அதீக் ஹுசைன் கான் பந்தனவாசியின் தந்தை இக்பால் ஹுசைன் கான் பந்தனவாசி . அதீக் ஹுசைன் கான் ஆக்ரா கரானாவின் நிறுவனர் உஸ்தாத் ஃபயாஸ் கான் சாஹபின் கொள்ளுப் பேரன் மற்றும் ஜாபர் ஹுசைன் கான் பதானியின் மருமகன் ஆவார். இவ்வாறு பாரம்பரியமாக, இசை தலைமுறையைக் கொண்டுள்ளதால், இயல்பாகவே கவ்வாலி இசையில் ஈடுபாடு மிகுந்து காணப்பட்டார்.

நிகழ்ச்சிகள்

தொகு

கோவாவில் உள்ள கலா அகாடமியில் 25வது பக்தி சங்கீத் சமாரோஹ், வசந்த ஹப்பா விழா மற்றும் உலக புனித இசை போன்ற விழாக்களில் கவாலி பாடியுள்ளார்.பல நாடுகளில் கவ்வாலி நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Class Qawwal". 21 January 2004. 
  2. "Calender [sic] of cultural events for Games released". 7 September 2010 இம் மூலத்தில் இருந்து 23 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120523184335/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-07/delhi/28226860_1_cultural-festival-cultural-extravaganza-classical-music-festival. 
  3. "Jashn-e-Dilli". Delhi Tourism. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 April 2011.
  4. "'Virasat' begins today in city". 31 August 2010 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100918070649/http://www.hindu.com/2010/08/31/stories/2010083162720300.htm. 
  5. Ahuja, Rajesh. "Who's who in art & culture to showcase India's heritage at CWG". news. web India news. Archived from the original on 4 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. India Today, MUSIC REVIEW RUHANIYAT. India Today Group. 1 May 2006.
  7. "Qawwali and kebabs rock Town Hall". India Today. India Today Group. பார்க்கப்பட்ட நாள் 9 October 2009.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதீக்_உசேன்_கான்&oldid=3927039" இலிருந்து மீள்விக்கப்பட்டது