அதுல் குமார் அஞ்சான்

இந்திய அரசியல்வாதி

அதுல் குமார் அஞ்சான் (Atul Kumar Anjaan) ( இந்தியாவின் லக்னோவில் பிறந்த இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார்.[2][3] இவர் மாநில வாரியப் பள்ளிபடிப்பு இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு பின்னர் இளங்கலைச் சட்டம் ஆகியவற்றை லக்னோவில் முடித்தார்.[4] கோசி மக்களவைத் தொகுதி பல முறை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) வேட்பாளர்களை அனுப்பிய வரலாற்றைக் கொண்டுள்ளது 1980 களின் முற்பகுதி வரை வட இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் 1990 களில் இருந்து கட்சி தனது பலத்தை இழந்தது. ஆனாலும் கட்சி இவரை தேர்தலில் போட்டியிட வைத்தது. 2014 ,இந்தியப் பொதுத் தேர்தலில் கோசி மக்களவைத் தொகுதியின் பொதுவுடமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். 1998 முதல் மக்களவைத் தேர்தலில் தோல்வியையே சந்தித்து வருகிறார்.[5][6]

அதுல் குமார் அஞ்சான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலக்னோ, இந்தியா[1]
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழிடம்இந்தியா
முன்னாள் கல்லூரிஇலக்னோ பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Election Commission of India".
  2. "Left convention to focus on isolating communal forces: Atul Kumar Anjaan".
  3. Atul Kumar Anjaan
  4. "Election Commission Record of Dr. Atul Kumar Anjaan".
  5. "Biodata of Dr. Atul Kumar Anjaan". Archived from the original on 19 May 2014. Alt URL
  6. "Information and Statistics-Parliamentary Constituencies-70-Ghosi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_குமார்_அஞ்சான்&oldid=3926412" இலிருந்து மீள்விக்கப்பட்டது