அதுல் குமார் கோயல்

இந்தியத் தொழிலதிபர் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர்

அதுல் குமார் கோயல் (Atul Kumar Goel) என்பவர் ஓர் இந்திய தொழிலதிபர். இவர் பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஐக்கிய வர்த்தக வங்கியில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். அலகாபாத் வங்கியிலும் இவர் பணிபுரிந்துள்ளார். [1] [2] [3]

அதுல் குமார் கோயல்
Atul Kumar Goel
கல்விஇந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்
பணிவங்கியாளர்
பட்டம்நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி, பஞ்சாப் தேசிய வங்கி
பதவிக்காலம்சனவரி 2022 முதல்

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

கோயல் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4]

தொழில்தொகு

கோயல் அலகாபாத் வங்கியில் பட்டயக் கணக்காளராக 1992 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் , இவர் ஐக்கிய வர்த்தக வங்கியில் நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். 2022 ஆம் ஆண்டில் பஞ்சாப் தேசிய வங்கியில் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சேர்ந்தார். இந்தியன் வங்கி சங்கத்தின் தலைவர், தி நியூ இந்தியா அசூரன்சு நிறுவனத்தின் இயக்குநர், வங்கி & நிதி இந்திய நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் மற்றும் தலைவர் என பல பொறுப்புகள் வகிக்கின்றார். [5] [4] [6]

மேற்கோள்கள்தொகு

  1. K.R.Srivats (2022-01-01). "Atul Kumar Goel joins Punjab National Bank". www.thehindubusinessline.com (ஆங்கிலம்). 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Bloomberg - Are you a robot?". www.bloomberg.com. 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "PNB.IN Company Profile & Executives - Punjab National Bank - Wall Street Journal". www.wsj.com. 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Atul Kumar Goel to be MD and CEO of Punjab National Bank". The New Indian Express. 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது."Atul Kumar Goel to be MD and CEO of Punjab National Bank". The New Indian Express. Retrieved 2022-08-04.
  5. "Banks Board Bureau recommends Atul Kumar Goel as MD, CEO of Punjab National Bank". Moneycontrol (ஆங்கிலம்). 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Managing Director & Chief Executive Officer PNB CEO Profile| PNB CEO". www.pnbindia.in. 2022-08-04 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_குமார்_கோயல்&oldid=3487949" இருந்து மீள்விக்கப்பட்டது