அதோஸ் மலை
அதோஸ் மலை (Mount Athos, கிரேக்கம்: Ἄθως) என்பது வடகிழக்கு கிரேக்கத்தில் உள்ள ஒரு மலை மற்றும் மூவலந்தீவு ஆகும். இது கிழக்கு மரபுவழி துறவியலின் முக்கிய மையமாகும். இது எலனிக் குடியரசிற்குள் ஒரு தன்னாட்சி அரசாக நிர்வகிக்கப்படுகிறது. அதாவது கான்ஸ்டான்டினோப்பிளின் எக்குமெனிகல் பேட்ரியார்க்கின் நேரடி அதிகார வரம்பில் அதோஸ் மலையின் துறவறவியம் மையம் உள்ளது.
அதோஸ் மலை | |
---|---|
Agion Oros | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,033[1] m (6,670 அடி) |
புடைப்பு | 2,012 m (6,601 அடி) |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 40°09′26″N 24°19′35″E / 40.15722°N 24.32639°E |
புவியியல் | |
அமைவிடம் | கிரேக்கம் |
வகை | கலப்பு |
வரன்முறை | i, ii, iv, v, vi, vii |
தெரியப்பட்டது | 1988 (12வது அமர்வு) |
உசாவு எண் | 454 |
Region | ஐரோபா |
அதோஸ் மலை பொதுவாக கிரேக்க மொழியில் Agion Oros என்று குறிப்பிடப்படுகிறது ( Ἅγιον Ὄρος , 'புனித மலை'). மரபுவழி பாரம்பரியத்தின் பிற மொழிகளும் 'புனித மலை' என்று மொழிபெயர்க்கும் பெயர்களைப் பயன்படுத்துகின்றன. இதில் பல்கேரியன், மக்தோனியன், செருபியன், சியார்ஜியன் ( მთაწმინდა ஆகியவை அடங்கும். இருப்பினும், இப்பகுதியில் பேசப்படும் அனைத்து மொழிகளும் இந்தப் பெயரைப் பயன்படுத்துவதில்லை; இது உருசிய மொழியில் "Athos" என்று அழைக்கப்படுகிறது, Афон ( Afon ); மேலும் உருமானிய மொழியில் "மவுண்ட் அதோஸ்", Muntele Athos அல்லது Muntele Atos என அழைக்கப்படுகிறது. பாரம்பரிய காலத்தில், இந்த மலை அதோஸ் என்று அழைக்கப்பட்டது, மூவலந்தீவு ஆக்டே அல்லது அக்டே (Koinē கிரேக்கம்: Ἀκτή) என்று அறியப்பட்டது.
அதோஸ் மலையில் பழங்காலத்திலிருந்தே மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இதில் நீண்ட காலம் கிறித்தவர் வசித்து வந்ததும், வரலாற்றில் துறவற மரபுகளுக்காகவும் பெயர் பெற்றது. இதன் துறவற மரபு குறைந்தது கி.பி 800 மற்றும் பைசந்தியர் காலத்துக்கு முந்தையது. இன்று, கிரேக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி நாடுகளான உருமேனியா, மல்தோவா, சியார்சியா, பல்காரியா, செர்பியா, உருசியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட துறவிகள், உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அதோசில் துறவு வாழ்க்கை வாழ்கின்றனர். அதோனைட் மடாலயங்களில் நன்கு பாதுகாக்கப்பட்ட கலைப்பொருட்கள், அரிய புத்தகங்கள், பழங்கால ஆவணங்கள், மகத்தான வரலாற்று மதிப்புள்ள கலைப்படைப்புகளின் அரிய பல தொகுப்பைக் கொண்டுள்ளன. அதோஸ் மலை 1988 முதல் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
அதோஸ் மலை கிரேக்கத்தின் மற்ற பகுதிகளைப் போலவே சட்டபூர்வமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், துறவற சமூக நிறுவனங்களுக்கு ஒரு சிறப்பு அதிகார வரம்பு அளிக்கபட்டு உள்ளது. கிரேக்கம், ஐரோப்பிய சமூகத்தில் (ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடி) சேர்ந்த போது மீண்டும் இது உறுதிப்படுத்தப்பட்டது. [2] இதன்படி துறவற சமூகத்தின் அதிகாரிகளுக்கு அதன் பிரதேசத்தில் மக்கள் மற்றும் பொருட்களின் நகர்வுச் சுதந்திர இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரம் அளிக்கிறது; குறிப்பாக, ஆண்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Mount Athos Home". Archived from the original on 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
- ↑ "Official Journal of the European Communities: L 291 – Volume 22 – 19 November 1979". Eur-lex.europa.eu. Eur-lex.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2 January 2020.