அத்திலாந்திக் அடிமை வணிகம்

(அத்திலாந்திக் அடிமை வியாபாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் அத்திலாந்திக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.[1][2][3]

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃபா என்பதன் கருத்து பெரும் அழிவு என்பதாகும்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Thornton, p. 112.
  2. "The transatlantic slave trade". BBC. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06. * Some of those enslaved were captured directly by the British traders. Enslavers ambushed and captured local people in Africa. * Most slave ships used British 'factors', men who lived full-time in Africa and bought enslaved people from local leaders.
  3. "Implications of the slave trade for African societies". London: பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 12 June 2020.