அத்தி (சேரர்படைத் தலைவன்)
சங்கப்பாடல்களில் அத்தி என்னும் பெயருடன் இரண்டு பேர் உள்ளனர்.
ஒருவன் சோழ அரசன் கரிகாலனின் மகளான ஆதிமந்தியின் காதலன். இவனது முழுப்பெயர் ஆட்டனத்தி.
மற்றொருவன் சோழ அரசன் பெரும்பூட் சென்னியின் பகையாளி.
பகையாளி என்பதால் இவனைச் சேரர் படைத்தலைவன் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]
போர் என்னும் ஊரைத் தலைமை இடமாக வைத்துக்கொண்டு பழையன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் சோழனின் நண்பன் அல்லது படைத்தலைவன். இவனை அவனது தலைநகருக்கு அருகிலிருந்த கட்டூர் என்னுமிடத்தில் ஏழு-பேர் கூட்டாகச் சேர்ந்து தாக்கிக் கொன்றனர். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, கணையன், புன்றுறை என்போர் அந்த ஏழு-பேர்.[2]
இந்தப் பாடலில் அத்தி "நறும்பூண் அத்தி" என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.