சோழன் பெரும்பூட் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கங்கன் என்பவனும் ஒருவன். இக்கூட்டணி கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூட் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஒடியவர்களில் இந்தக் கங்கனும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச் சிறையில் அடைக்கப்பட்டான்.

புலவர் குடவாயிற் கீரத்தனார் இந்தச் செய்திகளைத் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (அகநானூறு 44)

கங்கர் பரம்பரை

தொகு

கங்கர் பரம்பரையினர் கி.பி.350 முதல் சுமார் 200 ஆண்டுகள் இப்போதுள்ள கர்நாடக மாநிலப் பகுதியில் செல்வாக்குடன் அரசோச்சி வந்தனர். இவர்கள் மேலைக்கங்கர் எனப்பட்டனர். இவர்களின் மற்றொரு பரம்பரை 11 ஆம் நூற்றாண்டில் தலைநூக்கி சுமார் 300 ஆண்டுகள் இப்போதுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில் ஆண்டுவந்தனர். இவர்களைக் கீழைக் கங்கர் என்று வரலாறு காட்டுகிறது. இந்த மரபின் சங்ககால முன்னோன் இந்தக் கங்கன்.[சான்று தேவை]

கங்கன், பெயர் விளக்கம்

தொகு

"வரப்பில் கங்கு வெட்டினான்" என்னும்போது 'கங்கு' என்னும் சொல் 'ஓரம்' என்னும் பொருளைத் தருகிறது. கங்கன் தமிழகத்தின் கங்கில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். கங்கை ஆற்றுப் பகுதியிலிருந்து வந்தவர் கங்கர் எனக் கொள்ளாமல் தமிழகத்தின் கங்கிலிருந்து ஆண்டவர் எனக் கொள்வது பொருத்தமானது. கங்கர் காலத்துக்கு முந்தைய சங்ககாலச் சான்றினை அடிப்படையாகக் கொண்டது.[1]

வெளிப் பார்வை

தொகு

பிற்காலக் கங்கை குலத்தவர்

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "An enthusiastic southern scholar has expressed the opinion that the scientific historian of India ... ought to begin his study with the basin of the Krishna, of the Cauvery, of the Vaigai (in Madura and the Pandya Country) rather than with the Gangetic plain, as it has been now long, too long, the fashion. That advice however sound it may be in principle, can not be followed in practice at present,"
    -Dr.Vincent A.Smith, Oxford History of India, 1919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கன்&oldid=2945877" இலிருந்து மீள்விக்கப்பட்டது