மேலைக் கங்கர்

(மேற்குக் கங்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேலைக் கங்கர்கள் (கன்னடம்: ಪಶ್ಚಿಮ ಗಂಗ ಸಂಸ್ಥಾನ): தமிழ்) பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். மைசூர் கோலார் பகுதிகளில் தமிழ் கங்க மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.இது கிபி 350 - 1000 வரை ஆட்சியில் இருந்தது. இதை மேலைக் கங்கர்களின் அரசமரபு என்றும் கூறுவர். கலிங்கத்தை ஆண்ட (தற்கால ஒடிசா) கீழை கங்கர்களிடம் (கிழக்கு கங்கர்கள்) இருந்து வேறுபடுத்துவதற்காக இவர்கள் மேலைக் கங்கர்கள் எனப்படுகின்றனர். பல்லவ பேரரசின் வலு குன்றிய நேரத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் விடுதலை வேண்டும் என புரட்சி செய்தனர். அக்கால கட்டத்தில் இவர்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சமுத்திர குப்தரின் படையெடுப்புக்கும் இக்கால கட்டத்தின் குழப்பமான நிலையே காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கிபி 350லிருந்து 550 வரை இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தார்கள். முதலில் கோலாரிலும் பின்னர் தலக்காட்டிலும் தங்கள் தலைநகரை அமைத்தார்கள். வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்கள் சீர்குலைந்து, சிதைந்து போகவே கங்க வம்சத்து சிவமாறன் என்ற இளவரசன் கொங்கல் நாடு 8,000 என்ற பகுதியின் சிற்றரசனாக முடிசூட்டிக்கொண்டு கி. பி.755 முதல் கி. பி. 765 வரை ஆட்சிசெய்தான். இவனே கங்க வம்சத்து முதல் அரசன், இவனை கொங்கணி மகாராஜன் என பிருதுகள் சாசனம் விவரிக்கிறது.[1] வாதாபி மேலை சாளுக்கியர்கள் ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்ததால் மேலைக் கங்கர்கள் ஆயினர்.

மேலைக் கங்க அரசமரபு
350–1000
மேலைக் கங்கர்களின் நிலப்பகுதி
மேலைக் கங்கர்களின் நிலப்பகுதி
நிலைபேரரசு
(350 வரை பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசு)
தலைநகரம்கோலார்
தலக்காடு
பேசப்படும் மொழிகள்தமிழ்
கன்னடம்
சமயம்
சமணம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
மகாராஜா 
• 350–370
கொங்கணிவர்மா மகாதேவா
• 986–999
இராசமல்லன் V
வரலாறு 
• கங்க ஆவணங்கள் கிடைத்த காலம்
400
• தொடக்கம்
350
• முடிவு
1000
முந்தையது
பின்னையது
Pallava
Chola Dynasty

கொங்கனிவர்மன் என்று களப்பிரர் மன்னன் வருவதால் கங்கர்களே களப்பிரர் என்ற கூற்றும் உண்டு.


பாதமி சாளுக்கியர்களின் எழுச்சிக்குப்பின் அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக காஞ்சி பல்லவர்களுடன் மோதினர். சாளுக்கியர்கள் வலுவிழந்து இராஷ்டிரகூடர்கள் ஆதிக்கம் கிபி 753ல் தக்காணத்தில் ஏற்பட்டவுடன் தன்னாட்சிக்காக நூறு ஆண்டுகள் போராடி பின் இராஷ்ரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக தஞ்சை சோழர்களை எதிர்த்தார்கள். கிபி 10த்தில் துங்கபத்ரா ஆற்றின் வடக்கில் இராஷ்ரகூடர்களை மேலைக் சாளுக்கியர்களும் சோழர்களும் இணைந்து முறியடித்தனர். சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.

பரப்பளவில் சிறிய நாடாக இருந்தபோதிலும் தற்போதைய தென் கருநாடகத்துக்கு பண்பாடு, இலக்கியம் போன்றவற்றில் இவ்வரசின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் தமிழ் மன்னர்கள். மைசூர் கோலார் பகுதிகளில் தமிழ் கங்க மன்னர்கள் ஆட்சி இருந்தது.மேலைக் கங்கர்கள் எல்லா சமயங்களையும் ஆதரித்தார்கள். சமண சமயத்தை பெரிதும் ஆதரித்தார்கள். சரவணபெலகுளா, பஞ்சகுட்ட பாசதி போன்றவை இவர்கள் காலத்தில் உருவானதாகும். இவர்கள் கூத்துக்கலையை பெரிதும் ஆதரித்தார்கள். இது தமிழ், சமசுகிருத இலக்கியங்கள் வளர துணைபுரிந்தது. யானைகள் மேலாண்மை, சமயம் உட்பட பல நூல்கள் இயற்றப்பட்டன.

மாலிக் கபூர் படையெடுப்பு பின்னர் கங்க மன்னன் ஆட்சி இழந்து தெற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாண்டியன் படை தளபதிகளாக குடி பெயர்ந்தனர்

மேலைக் கங்கர் தோற்றம்

தொகு

மேலைக் கங்கர்களின் முதல் அரசன் கொங்குனிவர்மன், தாங்கள் இஷ்வாகுவின் பரம்பரையில் (சூரிய வம்சத்தில்)பிறந்தவன் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளான்.

மேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு

தொகு

அனந்தவர்மன் சோடகங்கன், கீழைக் கங்கர் பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட மேலைக் கங்கர் மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. களப்பிரர் காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் இந்திரவர்மன்[2] என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின்[3][4][5] கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன்[4], கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி[6] என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, ராஜராஜ கங்கேயன் இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான அனந்தவர்மன் சோடகங்கன் 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான வீரராஜேந்திர சோழனை தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் வீரராஜேந்திர சோழனின் மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அனந்தவர்மனை தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் அனந்தவர்மன் சோழ கங்கன் தன் தலைநகரை 1135 இல் கலிங்கநகருக்கு (இன்றைய கட்டாக்) நகருக்கு மாற்றி, தாங்கள் மேலைக்கங்கர்களாக என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் கீழைக் கங்கர் என்று வழங்குகின்றனர்.

மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: தொடர்பின் குழப்பங்களும் தெளிவும்

தொகு

மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள் [7]. இதற்கு காரணம் விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலன் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலம் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கொலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான்[8].

ஆனால் அதே கல்வெட்டிலேயே இந்த காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு [9], தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காளையை / நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது [10].

ஆக, காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து ஒடுக்கி, தலைக்காடு, மைசூர் பகுதிகளை அதன்பின்னர்தான் கையகப்படுத்தினார்கள் என்பதும், 11ஆம் நூற்றாண்டு வரை இப்படி சேர்த்த தேசங்களே கங்கவாடி 96000 என்பதும் தெளிவாகிறது [11]. அதன் பின்னரே 81 தலைமுறை / ஆட்சியாளர்கள் கழித்து, மேலைக் கங்கர் மரபில் இருந்து கிளைத்த காமர்னவனும் அவன் தம்பிகளும் கலிங்கத்தை வீழ்த்தி, பாலாதித்தனை கீழ்ப்படியசெய்து, முக்கலிங்கத்தை தலைநகராக கொண்டு மூன்று கலிங்க நாடுகளையும் ஒரே சாம்ராஜ்யமாக ஆள துவங்கியதில் இருந்து பிரிந்து செல்கிறது. அதன் பின்னர் காமர்னவனில் இருந்து 18ஆம் தலைமுறையாக அனந்தவர்மன் சோடகங்கன் காலத்தில் மேலைக்கங்கர் என்ற அடையாளம் மறைந்து கீழைக் கங்கர் என்று என்றும் இல்லாத அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒரு பேரரசாக கலிங்கத்து கீழைக் கங்கர் உருபெருகின்றனர்.

கங்கபாடியில் கங்கர் புகும் முன் அவர்கள் எங்கிருந்தனர் என்றும் கோலாஹளனின் பிறப்புக்கு முன்னர் காங்கேயன் பரம்பரை 18 தலைமுறைகள் எங்கு அரசாண்டனர் என்பதும் மிகப்பெரும் கேள்விக்குறி இல்லை எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால், காங்கேயனின் பரம்பரை தோன்றியது, இன்றைய கொங்குநாட்டின் காங்கேயத்தில் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

போசள அரசு கங்கர் பகுதியை கைப்பற்றியதால் கங்க மன்னர்கள் போசள அரசர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக மாறி விட்டார்கள். திருமண உறவு உண்டு. வீரவல்லாளதேவர் சகோதரியை திருமணம் செய்து கொண்டார் கங்க மன்னன் சோமய தெண்ணாயக்க. இவர் கட்டியது தான் சோமேஷ்வர் கோவில்.

திருச்சி காரிக்குடி கல்வெட்டு இவரை கத்திக்காரர் மகாபிராதானி என்று கூறுகிறது.

மாலிக் கபூர் படையெடுப்பு பின்னர் கங்கர் வாரிசுகள் பாண்டியனோடு தென்காசி குடி பெயர்ந்தனர்.

கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்

தொகு

பழைய கலிங்க நாடு ஒடிய நாட்டை தவிர்த்த ஒரிசாவையும், வேங்கி தவிர்த்த வடகிழக்கு ஆந்திரத்தையும் சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் மற்றும் அவன் மச்சினன் மாப்பிள்ளை முறையான அனந்தவர்மன் சோடகங்கன் இருவருக்கும் இடையே இரண்டாம் கலிங்கத்து போர் நடக்கும் 1112 ஆம் வருடம் வரை கலிங்கத்தின் தலைநகராக முக்கலிங்கம்[12] (இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் [13] அருகில்) வம்சாதரா நதி கரையில் இருந்தது.[14]

போருக்கு பின்னால் அனந்தவர்மன் தலை நகரை ஒடிய தேசம்/ஒட்ட நாட்டில் உள்ள மகாநதி சூழ்ந்த கட்டாக் நகருக்கு மாற்றியதால் [15] பிற்காலத்தில் அந்த மாநிலத்திற்கு ஒரிசா என்ற பெயர் வந்தது. அதனாலேயே அதுவரை கலிங்கம் கலிங்கர் என்று வழங்கி வந்த வழக்கு ஒட்டியர் [16] என மாறியது. ஆனாலும் ஒரிசா என்று வழங்கி வந்த பெயரை பழைய பெயரான ஒடிய தேசம்[17] / ஒடிசா என்றே இன்று மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-126)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழகம்-1954-
  2. Lord Jagannath By Suryanarayan Das, Page 182, http://books.google.co.in/books?id=gFn8wSDfSxEC&pg=PA182&dq=indravarman+adhiraja+jirjingi&hl=en&sa=X&ei=0-ZCVOq9LYzygwTjo4GQDA&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=indravarman%20adhiraja%20jirjingi&f=false
  3. He made Kalinga independent by defeating the Somavamsis and declared himself Maharajadhiraja., http://www.orissadiary.com/orissa_profile/orissahistory.asp பரணிடப்பட்டது 2014-09-23 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 Lord Jagannath By Suryanarayan Das, Page 179, http://books.google.co.in/books?id=gFn8wSDfSxEC&pg=PA179&dq=Trikalingadhipati+soma+keshari&hl=en&sa=X&ei=ZutCVPfsBsKWgwSfroLoAQ&ved=0CB8Q6AEwAA#v=onepage&q=Trikalingadhipati%20soma%20keshari&f=false
  5. Orissa District Gazetteers: Koraput, Orissa Govt press, 1966, http://books.google.co.in/books?ei=Q-hCVNmlCdfAggSV6IKADg&id=ZytuAAAAMAAJ&dq=indravarman+somavamshi&focus=searchwithinvolume&q=somavamshi
  6. Inscriptions of the Śarabhapurīyas, Pāṇḍuvaṁśins, and Somavaṁśins: Introduction By Ajay Mitra Shastri, http://books.google.co.in/books?id=Idd9i5nP160C&pg=PA76&lpg=PA76&dq=Trikalingadhipati&source=bl&ots=M5XoMc2XoB&sig=3v1Njkmye0LQEtgB5V37CSgqkkI&hl=en&sa=X&ei=5elCVOPFB42PNqusgvgJ&ved=0CCkQ6AEwAg#v=onepage&q=gangeya&f=false
  7. Supposing the founders of the Ganga dynasty to have come from Central India, and matured their plans at Perur, in Kadapa district, for the acquisition of Kolar and the midland and southern parts of Mysore, they would soon encounter the opposition of the Mahavali or Bana kings, whose western boundary was probably the Palir, which is close to Kolar on the east. We accordingly find Konguni-varna described as consecrated to conquer the Bana mandala, and as a wild-fire in consuming the stubble of the forest called Bana. From the east the Ganga princes marched to the west, and are represented as engaged in leading an expedition to the Konkan or western coast, when they came to Mandali, near Shimoga, where, by the advice of Simhanandi, they established a chaityalaya. Probably there was a considerable Jain element in the population of Mysore at the time, over whom Simhanandi exerted his influence to gain their acceptance of the Ganga rule., Mysore: a gazetteer compiled for government, Volume 1, Benjamin Lewis Rice, https://archive.org/stream/mysoreagazettee01ricegoog/mysoreagazettee01ricegoog_djvu.txt , http://www.amazon.com/Mysore-Gazetteer-Compiled-Government-Volume/dp/1174563621
  8. Kolahala, the last but one of these, it s.tys, "built the city named Kolahala iu the great Gangavadi vishaya." After 80 kings (not named) in suceession to Virochana (II) had enjoyed the city of Kolahala, Gazetteer of Mysore By B. L. Rice, http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA106&lpg=PA106&dq=Kamarnava+II&source=bl&ots=ve3ezzA5BX&sig=YNfGHy4mM8XLtgFVaqGutHTaDV4&hl=en&sa=X&ei=r7pCVImRFsXCggSrvoLQDw&redir_esc=y#v=onepage&q=Kamarnava%20II%20kolahala&f=false
  9. Virasimha, who had five sons — Kamarnava, Dinarnava, Gunarnava, Marasimha, and Vajrahasti. The first of these, giving over his own territory to his paternal uncle (not named), Epigraphia carnatica - Volume 9, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore, 1894, http://archive.org/stream/epigraphiacarnat09myso/epigraphiacarnat09myso_djvu.txt
  10. Virasimha, who had five sons, Kamarnava, Danarnava, Ciunarnava, Marasimha, and Vajrahasta. The first of these, giving the kingdom to his maternal uncle, set out with his brothers to conquer the earth, and coming to the Mahendra mountain, worshipped Gokarnasvami, and obtained the crest of a bull and the symbols of sovereignty. He and his brothers subdued Baladitya, who had grown sick of war, and took possession of the (three) Kalingas. Giving Ambavadi to the third brother, S6da or Seda to the fourth, and Kantaka to the fifth, Kamarnava, with his capital at Jantavura, ruled over the Kalingas, nominating his brother Danarnava as his successor. After these two, fifteen kings ruled, ending with Vajrahasta V, who married Vinaya-mahadevi of the Vaidumba family.., Epigraphia carnatica - Vol 9 - page 317, B. Lewis Rice, Director of Archaeological Researches in Mysore. - https://archive.org/stream/mysoreagazettee01ricegoog#page/n358/mode/2up
  11. It is undoubted that the Gangas of Mysore came into conflict with the banas at the first, and occupied nearby all the districts down to the 11th century, Gazetteer of Mysore, By B. L. Rice, http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA106&dq=banas+truth+conflict&hl=en&sa=X&ei=FI9DVO_2J4zFggSd0ILAAQ&ved=0CCcQ6AEwAg#v=onepage&q=banas%20truth%20conflict&f=false
  12. Mukhalingam, Srikakulam district, AP, en:Mukhalingam
  13. en:Vizianagaram district
  14. Social and Cultural Life in Medieval Andhra, By M. Krishna Kumari, http://books.google.co.in/books?id=B5SaAGpGNbAC&pg=PA148&lpg=PA148&dq=Mukhalingam+capital&source=bl&ots=8Ko-b9KiRu&sig=4w1fkIzrtMOzQTyErjZ-FWKTRA0&hl=en&sa=X&ei=6bxCVLCAL4_HgwS4ioCABg&redir_esc=y#v=onepage&q=Mukhalingam%20%20shifted%20cuttack%201135&f=false
  15. Anantavarman Chola Ganga, the most illustrious of the Ganga rulers shifted his capital to Cuttack in about A.D. 1135 after the conquest of Orissa – Social and Cultural Life in Medieval Andhra, By M. Krishna Kumari, http://books.google.co.in/books?id=B5SaAGpGNbAC&pg=PA148&lpg=PA148&dq=Mukhalingam+capital&source=bl&ots=8Ko-b9KiRu&sig=4w1fkIzrtMOzQTyErjZ-FWKTRA0&hl=en&sa=X&ei=6bxCVLCAL4_HgwS4ioCABg&redir_esc=y#v=onepage&q=Mukhalingam%20%20shifted%20cuttack%201135&f=false
  16. University of Madras Lexicon - ஒட்டியன் - 1. A nativeof Orissa; ஒட்டரதேசத்தான் (பாரத. இராசசூய. 134) 2. King of Orissa; ஒட்டர நாட்டரசன். ஒட்டியன்போற் பெண். (தமிழ்நா. 223), http://agarathi.com/word/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
  17. Oriental Historical Manuscripts in the Tamil Language, Volume 1 ,http://books.google.co.in/books?id=jVUIAAAAQAAJ&pg=PA9&lpg=PA9&dq=ottiya+desam&source=bl&ots=8gCMiVIGab&sig=5RucBBAUJPbPd6ob3zcZE0QxRCM&hl=en&sa=X&ei=osJCVKGuJdXaatj5Ag&redir_esc=y#v=onepage&q=ottiya&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலைக்_கங்கர்&oldid=4087544" இலிருந்து மீள்விக்கப்பட்டது