அந்தகியா நகரம்

அந்தகியா (ஆங்கிலம்: Antakya) என்பது தெற்கு துருக்கியின் கதே மாகாணத்தின் தலைநகரம் ஆகும். பண்டைய காலங்களில், அந்தகியா அந்தியோகியா என்று அழைக்கப்பட்டது. மேலும் பல நூற்றாண்டுகளாக ரோமானிய பேரரசின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். இது கிறிஸ்தவத்தின் ஆரம்பகால மையமாக இருந்தது. இதன் மக்கள் தொகை சுமார் 250,000 ஆகும். பெரும்பாலான மக்கள் துருக்கியை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகிறார்கள், அதே நேரத்தில் ஒரு சிறுபான்மையினர் அரபு மொழி பேசுபவர்கள். அந்தகியா நன்கு தண்ணீர் பாயும் வளமான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

1935 இல் புள்ளிவிவரங்கள் தொகு

1935 ஆம் ஆண்டில், துருக்கிய மற்றும் அரபு முஸ்லிம்கள் 80% க்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு குடியிருந்தனர். பெரும்பாலான அலாவிசுகள் மற்றும் ஆர்மீனியர்கள் துருக்கியை இரண்டாவது மொழியாகப் பேசினர் [1] மற்றும் அரபு அல்லது ஆர்மீனிய மொழியை முதல் மொழியாகப் பேசினர்.

1798 ஆம் ஆண்டில் அந்தகியாவில் ஒரு பிரித்தானிய பயணி "இங்குள்ள மொழி பொதுவாக துருக்கியம்" என்று கூறினார் (அதே நேரத்தில் அலெப்போவில் நடைமுறையில் இருந்த மொழி அரபு மொழியாக இருந்தது).[2]

நிலவியல் தொகு

அந்தகியா ஓரான்தசு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மத்திய தரைக்கடல் கடற்கரையிலிருந்து தோராயமாக 22 கி.மீ தூரம் கொண்டுள்ளது. இந்த நகரம் மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது, வடக்கே நூர் மலைகள் (பண்டைய அமனோஸ்) மற்றும் தெற்கே கெல்டாஸ் (ஜெபல் அக்ரா), 440 மீட்டர் உயரமுள்ள ஹபீப்-ஐ நெக்கார் (பண்டைய சில்பியஸ் மவுண்ட்) அதன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலைகள் ஒரு பச்சை பளிங்கின் மூலமாகும். அந்தகியா சவக்கடல் பிளவின் வடக்கு விளிம்பில் உள்ளது. மேலும் பூகம்பங்களால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடியது.

காலநிலை தொகு

வெப்பமான மற்றும் வறண்ட கோடைகாலங்கள் மற்றும் லேசான மற்றும் ஈரமான குளிர்காலங்களுடன் இந்த நகரம் வெப்பமான-கோடைகால மத்தியதரைக் கடல் காலநிலையை ( கோப்பன் காலநிலை வகைப்பாடு) கொண்டுள்ளது; இருப்பினும் அதன் உயரம் காரணமாக, அந்தகியா கடற்கரையை விட சற்று குளிரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

கல்வி தொகு

முஸ்தாபா கெமால் பல்கலைக்கழகம் செரினியோலில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட பல துறைகள் உள்ளது , இந்தப் பல்கலைக்கழகத்தின் வடக்கு மையம் 1992 இல் நிறுவப்பட்டது, தற்போது 32,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர்.[3]

செரினியோலில் உள்ள வளாகத்தைத் தவிர, மாகாணத்தின் அனைத்து முக்கிய மாவட்டங்களிலும் அல்தேனா, அன்தகியா, பெலன், தார்த்தியோல், எர்சின், காசா, இசுகெண்தெருன், கோர்கான், உரெய்கான்லே, சமந்தா மற்றும் எயேலாதஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முஸ்தாபா கெமால் பல்கலைக்கழகம் உள்ளது.

முக்கிய காட்சிகள் தொகு

நீண்ட மற்றும் மாறுபட்ட வரலாறு ஆர்வமுள்ள பல கட்டடக்கலை தளங்களை உருவாக்கியுள்ளது. அந்தகியாவில் பார்வையாளர்கள் பார்க்க நிறைய இருக்கிறது, இருப்பினும் சமீபத்திய தசாப்தங்களில் நகரத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் மறுவடிவமைப்பில் பல கட்டிடங்கள் இழக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து தொகு

ஹடே விமான நிலையத்திலிருந்து இந்த நகரம் விமான சேவையைப் பெறுகிறது.

விளையாட்டு தொகு

அந்தகியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில்முறை கால்பந்துஅணிகள் உள்ளது.

உணவு தொகு

அந்தகியாவின் உணவு புகழ்பெற்றது. அதன் உணவு துருக்கியை விட சுவைகளில் சிறந்தது என்று கருதப்படுகிறது. இதன் உணவு வகைகள் ஏராளமான உணவு வகைகளை வழங்குகின்றன, இங்கு மாட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்குட்டிகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரபலமான உணவுகளில் வழக்கமான துருக்கிய கபாப் அடங்கும், தட்டையான புளிப்பில்லாத ரொட்டியில் மசாலா மற்றும் வெங்காயத்துடன் பரிமாறப்படுகிறது. துருக்கிய காபி மற்றும் உள்ளூர் சிறப்புகளுடன் சூடான மசாலா உணவு போன்றவை

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தகியா_நகரம்&oldid=2867854" இருந்து மீள்விக்கப்பட்டது