அந்தப்புரம் (ஊர்)
அந்தப்புரம் (Andapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் உப்பர் ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] அந்தப்புரம் நாமக்கல் வட்டத்தில், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். அந்தப்புரம் நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.
அந்தப்புரம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°03′54″N 78°13′31″E / 11.0649171°N 78.2252312°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
அரசு | |
• நிர்வாகம் | ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 637 020 |
தொலைபேசி குறியீடு | 04286 |
அமைவிடம்
தொகுஅந்தப்புரம் ஊரானது நாமக்கல்லில் இருந்து 19 கி.மீ தொலைவில், வலையப்பட்டி - காட்டுப்புத்தூர் சாலையில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை எண் 25 இல் நாமக்கல் - திருச்சிராப்பள்ளியிலிருந்து செல்லும் வழியில் அமைந்துள்ளது. [1]
கல்வி
தொகுஅந்தப்புரத்தில் பின்வரும் கல்வி நிறுவனங்கள் உள்ளன:
- அரசு மேல்நிலைப்பள்ளி
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பலதொழில்நுட்பக் கல்லூரி, மோகனூர்
- வெற்றி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
மருத்துவமனைகள்
தொகுஅந்தப்புரத்தில் இருந்து இரண்டு கி.மீ.தொலைவில் ஆலம்பட்டியில் நலவாழ்வு மையம் உள்ளது.
1. ஆரம்ப சுகாதார நிலையம் ஆலம்பட்டி
2. முருங்கை ஆரம்ப சுகாதார நிலையம்
கோயில்கள்
தொகுஅந்தப்புரத்தில் கீழே குறிப்பிடபட்டுள்ள கோயில்கள் உள்ளன:
- செல்லாயி அம்மன் கோவில்
- பிள்ளையார் கோவில்கள்
- மாரியம்மன் கோவில்
- அரசமரத்து கோவில்
- பெருமாள் கோவில்
- சிவன் கோவில்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Namakkal District". District Maps Online, Government of Tamil Nadu. GIS Division - National Informatics Centre-Tamil Nadu State Centre. Archived from the original on 9 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help). District Maps Online, Government of Tamil Nadu. GIS Division - National Informatics Centre-Tamil Nadu State Centre. Archived from the original பரணிடப்பட்டது 2011-04-09 at the வந்தவழி இயந்திரம் on 9 ஏப்ரல் 2011. Retrieved 13 மார்ச் 2011.