அந்தமான் செம்பகம்
அந்தமான் செம்பகம் | |
---|---|
வடக்கு அந்தமான் தீவில் அந்தமான் செம்பகம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | செண்ட்ரோபசு
|
இனம்: | செ. அந்தமானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
செண்ட்ரோபசு அந்தமானென்சிசு பீவான், 1867[2] | |
வேறு பெயர்கள் | |
செண்ட்ரோபசு சைனென்சிசு அந்தமானென்சிசு |
அந்தமான் செம்பகம் அல்லது பழுப்பு செம்பகம் (செண்ட்ரோபசு அந்தமானென்சிசு) குயில் குடும்பத்தினைச் சார்ந்த பறவையாகும். இது அந்தமான் தீவுகளில், கோகோ மற்றும் டேபிள் தீவுகளில் காணப்படுகிறது. இது சில சமயங்களில் பெரும் செம்போத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது. இது முக்கியமாகக் காடுகள் நிறைந்த வாழிடங்கள் மற்றும் அடர்ந்த தோட்டங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஇது பெரிய அளவிலான செம்பகமாகும். ஆண்களின் அளவு 380 முதல் 400 மி. மீ. வரையிலானவை. பெண்கள் செம்பகத்தின் அளவு 400 முதல் மி. மீ. வரையில் ஆண்களைவிடச் சற்றுப் பெரியது. இது செ. சினென்சிசு போன்று காணப்படும். இந்த பறவையின் இறகு நீலம் கலந்த ஊதா நிற மிளிர்வுடன் பெரும் செம்போத்தின் (சென்ட்ரோபசு சினென்சிசு) கருப்பு நிறத்திற்கு மாறாக, நெருக்கமாக ஒத்திருக்கிறது. வால் இறகுகள் வெளிப்படையான கருப்பு தண்டுகளைக் கொண்டுள்ளன.[3] இளம் வயது பறவையின் உடலின் அடிப்பகுதியில் சிறிய பட்டைகள் போன்று காணப்படும்.[4][5][6]
வகைபாட்டியல்
தொகுஇந்த சிற்றினம் முதன்முதலில் சென்ட்ரோபசு அந்தமானென்சிசு என (இடப்பெயர் அடிப்படையில்) ஆர். சி. டைட்லரால் விவரிக்கப்பட்டது. இருப்பினும் இவரது குறிப்புகள் 1867-ல் ஆர். சி. பீவனால் வெளியிடப்பட்டது. இசுடூவர்ட் பேக்கர் (1927) இதைத் தனிச் சிற்றினமாகக் கருதினார். ஆனால் ரிப்லி (1961), அலி மற்றும் ரிப்லி (1969) ஆகியோர் இதை சென்ட்ரோபசு சினென்சின் துணையினமாகச் சேர்த்தனர். காங்கேயன் தீவுகளில், சென்ட்ரோபசு சினென்சிசு காங்கேஞ்சென்சிசு என்ற பழுப்பு நிற வடிவத்துடன் மற்றொரு சிற்றினத்தின் அமைப்பின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகிறது. பீட்டர்சு இதனை ஒரு கிளையினமாக சந்தேகத்திற்குரியதாகக் கருதி மற்றும் இலங்கை சென்ட்ரோபசு குளோரோரிஞ்சசுடன் அதன் அமைப்பின் ஒற்றுமையைக் குறிப்பிட்டார். இராசுமுசென் மற்றும் ஆண்டெர்டன் (2005) இந்தப் பறவையின் தனித்துவமான ஓசையின் அடிப்படையில் இதனைத் தனியான சிற்றினமாகக் கருதுகின்றனர். மேலும் காங்கேய வடிவத்தையும் சென்ட்ரோபசு சினென்சிசு பற்றிய கூடுதல் ஆய்வுகளையும் பரிந்துரைக்கின்றனர்.[4][5][7][8]
பரவலும் வாழிடமும்
தொகுஅந்தமான் செம்பகம் அந்தமான் (குறைந்தபட்சம் தெற்கு, வடக்கு மற்றும் தொடர்புடைய தீவுகள்) மற்றும் அருகிலுள்ள கோக்கோ தீவுகள் மற்றும் மியான்மரின் டேபிள் தீவு ஆகியவற்றில் காணப்படுகிறது. காடுகள், தோட்டங்கள், காட்டின் விளிம்புகள், சதுப்புநிலங்கள், நெல் வயல்களின் விளிம்புகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது.[5]
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுஇது மழைக்காலத்தில் (மே முதல் ஜூலை வரை) இனப்பெருக்கம் செய்கிறது. மரக்குச்சி, புல் மற்றும் இலைகளால் கூட்டினை தரையிலிருந்து உயரமாக அமைத்து முட்டையிடுகின்றது. வழக்கமான கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் காணப்படும்.[5]
மிக ஆழமான மற்றும் எதிரொலிக்கும் வளையக் குறிப்புகளின் நீண்ட தொடரைக் கொண்ட இதன் ஓசை பெரும் செம்போத்தினைப் போன்று உள்ளது.[4]
இவை அனைத்து வகையான பூச்சிகள், சிறிய தவளைகள், நண்டுகள் மற்றும் பல்லிகளை உணவாக உண்ணுகிறது.[9]
படங்கள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Centropus andamanensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22684232A95211847. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684232A95211847.en. https://www.iucnredlist.org/species/22684232/95211847. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Beavan, RC (July 1867). Newton, Alfred. ed. "The Avifauna of the Andaman Islands". The Ibis (London: John Van Voorst) 3 (IX): 314–334. https://archive.org/stream/ibisns03brit#page/321/mode/1up/. "I only procured two specimens, the best of which was sent to the Asiatic Society's Museum, and the other unfortunately got destroyed (from Tytler's notes as quoted by Beavan)".
- ↑ Ali, S; SD Ripley (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 244–245.
- ↑ 4.0 4.1 4.2 Rasmussen, Pamela C.; Anderton, John C. (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington D.C. and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-67-9.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Baker, ECS (1927). Fauna of British India. Birds. Volume 4 (2nd ed.). London: Taylor and Francis. p. 194.
- ↑ Blanford, WT (1895). Fauna of British India. Birds. Volume 3. London: Taylor and Francis. p. 242.
- ↑ S. Dillon Ripley; Bruce M. Beehler (1989). "Ornithogeographic Affinities of the Andaman and Nicobar Islands". Journal of Biogeography 16 (4): 323–332. doi:10.2307/2845224. https://archive.org/details/sim_journal-of-biogeography_1989-07_16_4/page/323.
- ↑ Payne, RB (2005). The cuckoos. Oxford University Press. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850213-3.
- ↑ Butler, AL. "The birds of the Andaman and Nicobar Islands. Part 2". J. Bombay Nat. Hist. Soc. 12: 555–571. https://biodiversitylibrary.org/page/7148291.