அந்தமான் தமிழர்கள்

அந்தமான் தமிழர்கள் (Andaman Tamils) என்போர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தமிழ் பேசும் மக்கள் ஆவாா்கள். இவா்கள் பொதுவாக மதராசி (மதறாஸ், தமிழ் நாட்டின் முன்னாள் பெயர்) என அழைக்கப்படுகிறார்கள். 

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வரைபடம்

இத்தமிழர்களில் மூன்று பிாிவினா்  உள்ளனா். முதல் பிாிவினா்  தமிழ்நாட்டிலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி குடியேறியவர்கள். இவா்கள் அனைத்து தீவுகளிலும் மனிதர்கள் குடியேறிய பகுதியில்  காணப்படுகின்றனர். இரண்டாவது பிாிவினா், அன்றைய பர்மாவில் இராணுவ ஆட்சிக்கு பின்னர் மியன்மாரில் இருந்து இங்குவந்து குடியேறிய தமிழ் பேசும் மக்களாவர். மூன்றாவது பிாிவினா், இலங்கையில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் அந்த நாட்டின் இனவாத மோதல்களுக்குப் பின்னர் அங்கிருந்து புலம்பெயர்ந்து, அந்தமான் வந்து குடியேறியவர்கள். முதலாவது பிாிவின் மக்கள்தொகை மிகப்பெரியது. மேலும் இடப்பெயா்வு தொடர்வதால், இப்பிரிவின் மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. இப்பிரிவினர் தமிழ் மொழியில் பேசுகிறார்கள், எழுத்துக்களில் தமிழ் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். தமிழா்களைத் தவிர மற்றவா்களிடம் ஒருவிதமான இந்தி மொழியில் பேசுகின்றனர். இம் மொழி ’அந்தமான் இந்தி’ என்று அழைக்கப்படுகிறது. கல்வி பயின்ற தமிழர்கள் ஆங்கிலத்திலும் பேசுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் "உள்ளூர்" வாசிகள். அந்தமான் நிகோபார் தீவுகளில் சுமார் 100,000 தமிழர்கள் உள்ளனர்.

சோழப் பேரரசு தொகு

800 முதல் 1200 வரை, சோழ வம்சம் ஒரு பேரரசை உருவாக்கியது, இது தென்கிழக்கு இந்திய தீபகற்பற்பத்திலிருந்து மலேசியா [1] வரை பரந்து விாிந்து இருந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் (கிபி 1014 - 1042 ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைக் கைப்பற்றி, அங்கு ஸ்ரீ விசய சாம்ராஜ்யத்திற்கு (இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் அமைந்த இந்து-மலாய் பேரரசு) எதிரான ஒரு கடற்படைப் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு உத்தியாக கடற்படைத் தளத்தை அமைத்தார்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. Woodbridge Bingham; Hilary Conroy; Frank William Iklé (1964). A History of Asia. Allyn and Bacon. https://books.google.com/?id=r2ILAAAAIAAJ. "... Maldives, Nicobar, and Andaman islands all were brought under the sway of its navy. In the Tamil peninsula itself Chola subdued the kingdoms of Pandya ..." 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_தமிழர்கள்&oldid=3675675" இலிருந்து மீள்விக்கப்பட்டது