அந்தோனி சவிரிமுத்து
கலாபூசணம் அந்தோனி சவிரிமுத்து (மார்ச் 12, 1924 - மார்ச் 2, 2017) ஈழத்தின் பிரபலமான நாட்டுக்கூத்துக் கலைஞரும், அண்ணாவியாரும் ஆவார்.[1]
கலாபூசணம் அந்தோனி சவிரிமுத்து | |
---|---|
பிறப்பு | அண்ணாவியார் அந்தோனி சவிரிமுத்து பெப்ரவரி 12, 1924 மெலிஞ்சிமுனை, கரம்பொன், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | மார்ச்சு 2, 2017 | (அகவை 93)
அறியப்படுவது | கலைப்பணி |
பெற்றோர் | நீ. வ. அந்தோனி, கித்தோரி |
வலைத்தளம் | |
கலைக்குருசில் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகலைவருணன் அந்தோனி சவிரிமுத்து 1924 ஆம் ஆண்டு பங்குனி 12 ஆம் திகதி அண்ணாவியார் நீ. வ. அந்தோனி - கித்தோரி தம்பதிகளுக்கு ஏகபுத்திரனாக கரம்பொன், மெலிஞ்சிமுனை என்ற கிராமத்தில் பிறந்தார். 1948 ஆம் ஆண்டில் அடைக்கலம் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண்களும் 6 பெண்களும் மகவாகப் பிறந்தனர். 1937 முதல் 1970 வரை பல கூத்துக்களில் நடித்துப் பெருமை பெற்றார். 1971 ஆம் ஆண்டு இவரின் தந்தையாரின் மறைவிற்குப் பின் அவரின் கலைப்பணியைப் பொறுப்பேற்று 25 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
மேடையேற்றிய கூத்துகள்
தொகு- ஊசோன் பாலந்தை (1971)
- சகோதர விரோதி (1972)
- ஞானானந்தன் (1973)
- மதிவீரன் (1974)
- புனித கிறிஸ் தோப்பர் (1974-75)
- இராஜகுமாரி (1976)
- தாவீது கொலியாத் (1977)
- புனித கிறிஸ்தோப்பர் (1978)
- மந்திரி குமாரன் (1979)
- பிரதாபன் (1981)
- பிரளயத்தில் கண்டெடுத்த பாலன் (1981)
- அலசு நாடகம் (1982)
- செபஸ்தியார் கூத்து (1985)
- பிரபாகரன் (1986)
- ஞானானந்தன் (1988)
- புஸ்பா நாடகம் (1995)
- (பட்டமளிப்பு) ஆனந்தசீலன் (2004)
ஆவணப்படம்
தொகுஅந்தோனி சவிரிமுத்து அண்ணாவியாரின் முதலாம் ஆண்டு நினைவாக ஒளித்தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது.[2]
பட்டங்கள்
தொகுகலைத்தென்றல், கலைவேந்தன், கலைவருணன், கலாசமுத்திரம், கலாகங்கை, யாழ்முத்து, கலாபூஷணம்
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
தொகு- 1990 இல் யாழ் நாவாந்துறையில் மேடையேற்றப்பட்ட புனித கிறிஸ்தோப்பர் நாடக விழாவில் யாழ் முன்னாள் ஆயர் மேதகு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை பிரதம விருந்தினராகக் கலநது அண்ணாவியாரைப் பாராட்டினார்.
- 2004 சூன் 27 இல் ஆனந்தசீலன் நாடக விழாவில் 'கலைத்தென்றல்" பட்டமளிக்கப்பட்டது.[1]
- 2004ம் ஆண்டு ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்களைக் கொண்டு தாவீது கொலியாத்து நாட்டுக்கூத்தை நெறியாள்கை செய்து தீவகத்தில் 1ம் இடத்தையும் மாகாண மட்டத்தில் தெரிவாகி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார்.
- 2008 சனவரி 7 இல் நோர்வே பேர்கன் ஈழத்தமிழர் சங்கம் “கலைவருணண்” என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[1]
- 2015 செப்டம்பர் 10 இல் யாழ் மாவட்ட கலை கலாச்சார பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய கலை கலாச்சார விழாவில் வடமாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் பொன்னாடை போர்த்தி ‘‘யாழ் முத்து” என்னும் சிறப்பு விருது வழங்கிக் கௌரவித்தார்.
- வட மாகாண முதலமைச்சர் விருதும் காசோலையும் (2016)[1]
வழிவந்தோர்
தொகுஅந்தோனி சவிரிமுத்துவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நான்கு தலைமுறையாளர்களாக இக்கூத்துக் கலையைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கனடாவில் மகன் அண்ணாவியார் மிக்கேல்தாஸ், நோர்வேயில் மகன் அண்ணாவியார் ஜெயராஜா ஆகியோர் தொடர்ந்து இக்கலையை வளர்த்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "'கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து' அவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கல்". லங்காசிறி. 2 அக்டோபர் 2016. Archived from the original on 22 சூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்பிரல் 2024.
- ↑ "கலையுலகில் கலைவருணன்" ஒளிதொகுப்பு