பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை (Right Reverend Jacob Bastiampillai Deogupillai, 9 ஏப்ரல் 1917 - 25 ஏப்ரல் 2003) என்பவர் இலங்கைத் தமிழ் மதகுருவும், ரோமன் கத்தோலிக்க முன்னாள் யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.
அதி வணக்கத்துக்குரிய பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை | |
---|---|
யாழ்ப்பாண ஆயர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஆட்சி துவக்கம் | 18 டிசம்பர் 1972 |
ஆட்சி முடிவு | 6 சூலை 1992 |
முன்னிருந்தவர் | ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை |
பின்வந்தவர் | தோமஸ் சவுந்தரநாயகம் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | கரம்பொன், ஊர்காவற்துறை, இலங்கை | 9 ஏப்ரல் 1917
இறப்பு | 25 ஏப்ரல் 2003 | (அகவை 86)
படித்த இடம் | புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி Pontifical Urbaniana University இலங்கைப் பல்கலைக்கழகம் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுதியோகுப்பிள்ளை இலங்கையின் வடக்கே ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரில் 1917 ஏப்ரல் 9 இல் பிறந்தார்.[1][2][3] கரம்பொன் கன்னியர் மடம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்றி இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும்,[2][4] உயர்கல்வியை ரோம் நகரில் உள்ள பரப்புரைக் கல்லூரியிலும் தொடர்ந்து இறையியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று திருமறைச் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், கல்வியலுக்கான டிப்புளோமா பட்டமும் பெற்றார்.[5]
பணி
தொகு1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை உரோமை நகரில் குருக்களாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பின்னர் இலங்கை திரும்பி கரவெட்டியில் மதகுகுருவாகப் பணியாற்றினார்.[2] ஆசிரியராக சில காலம் பணியாற்றியப் பின்னர் அனுராதபுரம் புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளர் ஆனார்.[1][2] அதன் பின்னர் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றி கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.[1][2] 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[4] இக்காலகட்டத்தில் கத்தோலிக்க மாணவர்களுக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார்.[5]
தியோகுப்பிள்ளை 1967 மே 11 ஆம் நாள் யாழ் ஆயர் ஜெ. எமிலியானுஸ்பிள்ளையினால் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[5][2][3] 1972 சூலை 17 இல் யாழ்ப்பாஅணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் மறைவை அடுத்து 1973 சனவரி 9 இல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[2][3][4][6] 1991 டிசம்பர் 22 இல் தமது குருத்துவப் பொன்விழாவைக் கொண்டாடிய ஆயர் 1992 ஏப்ரல் 9 இல் இளைப்பாறினார்.[3][4]
கண்டி தேசிய குருக்கள் மடத்தில் இருந்த தியோகுப்பிள்ளை 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக யாழ் மறைமாவட்ட குரு மாணவர்களுடன் யாழ்ப்பாணம் திரும்பி, அங்கு புனித சவேரியார் குரு மடத்தை ஆரம்பித்தார்.[5] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 48.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Bishop Deogupillai passes away". தமிழ்நெட். 26 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8859.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bishop Jacob Bastiampillai Deogupillai". Catholic Hierarchy.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Emmanuel, S. J. (2 May 2003). "Bishop Deogupillai - a man of sturdy faith and courageous leadership". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 20 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050320214221/http://www.dailynews.lk/2003/05/02/fea03.html.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "மறைந்த பேரருட்திரு தியோகுப்பிள்ளை ஆண்டகை!". வீரகேசரி. 18 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2016-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161004022130/http://epaper.virakesari.com/.
- ↑ "History". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம். Archived from the original on 2013-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
- ↑ "Late Bishop's services recalled at funeral". தமிழ்நெட். 28 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8874.