இளவாலை
இளவாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் நகுலேஸ்வரம், கொல்லங்கலட்டி, பன்னாலை, விதாகபுரம் ஆகிய ஊர்களும், தெற்கில் முள்ளானையும், மேற்கில் மாரீசன்கூடலும் உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள்தொகு
- சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம், வானொலிக் கலைஞர்
- அமுதுப் புலவர்