வலிகாமம் வடக்கு பிரதேச சபை

வலிகாமம் வடக்கு பிரதேச சபை (Valikamam North Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 61.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்; தெற்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும்; மேற்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 21 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
சோமசுந்தரம் சுகிர்தன், த. தே. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர்
சண்முகலிங்கம் சஜீவன், த. தே. கூ
யூலை 2011 முதல்
உறுப்பினர்கள்21
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

வட்டாரங்கள் தொகு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 இளவாலை வடமேற்கு J222 இளவாலை வடமேற்கு
2 கீரிமலை J221 இளவாலை வடக்கு
J226 நகுலேஸ்வரம்
3 காங்கேசந்துறை J233 காங்கேசந்துறை மேற்கு
J234 காங்கேசந்துறை மத்தி
J235 காங்கேசந்துறை தெற்கு
4 தையிட்டி J247 தையிட்டி கிழக்கு
J249 தையிட்டி வடக்கு
J250 தையிட்டி தெற்கு
5 மயிலிட்டி J246 மயிலிட்டி வடக்கு
J248 மயிலிட்டித்துறை தெற்கு
J251 மயிலிட்டித்துறை வடக்கு
6 பலாலி மேற்கு J255 பலாலி வடமேற்கு
J256 பலாலி மேற்கு
7 பலாலி வடக்கு J254 பலாலி வடக்கு
8 பலாலி தென்கிழக்கு J252 பலாலி தெற்கு
J253 பலாலி கிழக்கு
9 மாவை வீமன்காமம் J231 மாவிட்டபுரம்
J232 மாவிட்டபுரம் தெற்கு
J236 பளை வீமன்காமம் வடக்கு
J237 பளை வீமன்காமம் தெற்கு
10 கொல்லங்கலட்டி J225 கொல்லங்கலட்டி
11 தெல்லிப்பழை தென்மேற்கு J223 வித்தகபுரம்
J224 பன்னாலை
12 கும்பிளாவளை J215 அளவெட்டி வடக்கு
J216 அளவெட்டி மத்தி
13 தெல்லிப்பழை மேற்கு J229 துர்க்காபுரம்
J230 தந்தை செல்வாபுரம்
14 வறுத்தலைவிளான் J240 தென்மயிலை
J241 வறுத்தலைவிளான்
15 வசாவிளான் J244 வசாவிளான் கிழக்கு
J245 வசாவிளான் மேற்கு
16 குரும்பசிட்டி-கட்டுவன் J238 கட்டுவன்
J239 கட்டுவன் மேற்கு
J242 குரும்பசிட்டி
J243 குரும்பசிட்டி கிழக்கு
17 தெல்லிப்பழை J227 தெல்லிப்பழை கிழக்கு
J228 தெல்லிப்பழை
18 அளவெட்டி கிழக்கு J217 அளவெட்டி கிழக்கு
J218 கணேஸ்வரம்
19 அளவெட்டி தென்மேற்கு J219 அளவெட்டி தெற்கு
J220 அளவெட்டி மேற்கு
20 மல்லாகம் J213 மல்லாகம் மத்தி
J214 மல்லாகம் வடக்கு
21 மல்லாகம் தெற்கு J212 மல்லாகம் தெற்கு

தேர்தல் முடிவுகள் தொகு

1998 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

29 சனவர் 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2,821 46.19% 11
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,799 29.45% 6
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 816 13.36% 2
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 528 8.64% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 144 2.36% 0
செல்லுபடியான வாக்குகள் 6,108 100.00% 21
செல்லாத வாக்குகள் 469
மொத்த வாக்குகள் 6,577
பதிவில் உள்ள வாக்காளர்கள் 53,697
வாக்களித்தோர் 12.25%

2011 உள்ளூராட்சித் தேர்தல் தொகு

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,065 70.71% 15
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 4,919 28.83% 6
  ஐக்கிய தேசியக் கட்சி 78 0.46% 0
செல்லுபடியான வாக்குகள் 17,062 100.00% 21
செல்லாத வாக்குகள் 1,643
மொத்த வாக்குகள் 18,705
பதிவில் உள்ள வாக்காளர்கள் 63,224
வாக்களித்தோர் 29.59%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. "Ward Map for Valikamam North Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 22 மார்ச் 2017. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Valikamam North Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]