பன்னாலை

இலங்கையில் உள்ள இடம்

பன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர்.[1] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதிக்கு வடக்கில், தெல்லிப்பழைச் சந்தியில் இருந்து ஏறத்தாழ 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இதன் தூரம் ஏறத்தாழ 19 கிமீ ஆகும். பன்னாலையைச் சுற்றி வித்தகபுரம், அளவெட்டி, துர்க்காபுரம், இளவாலை, தந்தை செல்வாபுரம் ஆகிய ஊர்கள் உள்ளன.

நிறுவனங்கள் தொகு

இவ்வூரில் பன்னாலை சர் கனகசபை வித்தியாலயம் என்னும் பாடசாலை ஒன்று உள்ளது.[2] இவ்வூரில் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம், பன்னாலை பூதராயர் கோயில் போன்றவை உள்ளன.

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாலை&oldid=3906472" இலிருந்து மீள்விக்கப்பட்டது