அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம்

காபிபோசா அல்லது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (ஆங்கில மொழி: COFEPOSA அல்லது Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act) என்பது அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்தவும், கடத்தல் குற்றங்களைத் தடுக்கவும் 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும். இது 1971 இல் இயற்றப்பட்ட மிசா சட்டத்திற்கு இணையாகப் பொருளாதாரத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். 1978 இல் மிசா சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும் இந்த காபிபோசா சட்டம் செயல்பாட்டிலுள்ளது[1]

அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம்
முக்கிய சொற்கள்
அந்நியச் செலாவணி, கடத்தல்

வரையறை தொகு

பொருட்களைக் கள்ளக் கடத்தல் செய்தல், கள்ளக்கடத்தல் செய்வதற்குத் துணையாக இருத்தல், கள்ளக்கடத்தல் செய்யப்பட்ட பொருளை வைத்திருத்தல், கள்ளக் கடத்தலுக்கு உடந்தையானவரை பாதுகாத்தல் போன்ற செயல்களுக்கு இச்சட்டம் தண்டனை வழங்குகிறது.[2] பொதுவாக விமான நிலையங்கள், துறைமுகங்களில் தங்கத்தைக் கடத்தல், உரிய முறையில்லாமல் சட்டவிரோதமாக மின்னணுப் பொருள்கள் கொண்டு செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது இச்சட்டம் பாய்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் தொகு

பொதுவாக, இச்சட்டத்தை மனித உரிமை மீறலாகப் பயன்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Harding, Andrew; Hatchard, John (1993). Preventive Detention and Security Law: A Comparative Survey. Martinus Nijhoff Publishers. பக். 61–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7923-2432-3. https://books.google.com/books?id=J0eBd0JDvRQC&pg=PA61. 
  2. "காபிபோசா" (PDF). dor.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019.
  3. "Efforts are on in the Revenue Department, headed by a nominee of the AIADMK in the Union Ministry, to scuttle the process of adjudication and prosecution launched by the Enforcement Directorate against Jayalalitha's associates for alleged FERA violations.". பிரண்ட்லைன். https://frontline.thehindu.com/static/html/fl1514/15140370.htm. பார்த்த நாள்: 18 February 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "அந்நிய செலாவணி மோசடி: டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் - உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8228-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9464783.ece. பார்த்த நாள்: 18 February 2019.