அனாம் சகாரியா
அனாம் சகாரியா (Anam Zakaria) கனடாவைச் சேர்ந்த பாக்கித்தான் நாட்டு எழுத்தாளராவார். வாய்மொழி வரலாற்றாசிரியர் மற்றும் கல்வியாளராகவும் இவர் அறியப்படுகிறார். [1][2] பரிசு பெற்ற புத்தகமான பிரிவினையின் அடிச்சுவடுகள்: நான்கு தலைமுறை பாக்கித்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் கதைகள் (2015) மற்றும் வங்காளதேசம், பாக்கித்தான் மற்றும் இந்தியாவின் மக்களைப் பற்றிய ஒரு வரலாற்று நூலான 1971 (2019) போன்றவை இவர் எழுதிய நூல்களாகும்.[3][4]
அனாம் சகாரியாAnam Zakaria | |
---|---|
தேசியம் | பாக்கித்தானிய கனடியர் |
கல்வி | பன்னாட்டு வளர்ச்சி; மானிடவியல் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மெக்கில் பல்கலைக்கழகம்; டொராண்டோ பல்கலைக்கழகம் |
பணி | எழுத்தாளர், ஆய்வாளர், கல்வியாளர், வாய்மொழி வரலாற்றாசிரியர் |
சுயசரிதை
தொகுஅனாம் சகாரியா மெக்கில் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சி பாடத்தில் இளங்கலை பட்டமும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[5][6][7]
அனாம் சகாரியா வளர்ச்சித் துறையில் பத்து வருட தொழில் அனுபவம் கொண்டவராவார். 2010 ஆம் ஆண்டு முதல் இவர் பாக்கித்தானில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.[8][9]
இவர் முன்னதாக பாக்கித்தானின் குடிமக்கள் காப்பகத்தில் இயக்குநராக பணியாற்றினார். பாக்கித்தான் பிரிவினை தலைமுறையிடமிருந்து பல நேர்காணல்களை நடத்தினார் மற்றும் 2010-2013 ஆண்டுகளுக்கு இடையில் மாற்றத்திற்கான பரிமாற்ற திட்டத்தை முன்னெடுக்கும் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[10] இந்த நிகழ்ச்சி பாக்கித்தான் மற்றும் இந்தியாவின் மாணவர்களிடையே அமைதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். அனாம் சகாரியா பாக்கித்தானின் வளர்ச்சிக்கான சங்கத்தில் கல்வி மற்றும் ஆற்றல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.[11] எட்சிடார்ட்டு பள்ளியில் கற்பித்தல் பணியிலும் ஈடுபட்டார்.[12][13]
அனாம் சகாரியா ஒரு பகுதிநேரப் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். அல்-யாசீரா, தி நியூயார்க் டைம்சு, டான், தி இல்ல் டைம்சு மற்றும் தி வயர் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[14][15][16]
அனாம் சகாரியா தெற்காசிய வரலாறு மற்றும் மோதல்கள் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார்.[17][18] பிரிவினையின் அடிச்சுவடுகள்: நான்கு தலைமுறை பாக்கித்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் கதைகள் (2015) என்பது இவரது முதல் புத்தகமாகும்.[19][20] அப்போதிருந்து, பிட்வீன் தி கிரேட் டிவைடு: பாக்கித்தானில் ஒரு பயணம்- காசுமீர் (2018) மற்றும் 1971: வங்காளதேசம், பாக்கித்தான் மற்றும் இந்திய மக்கள் வரலாறு (2019) ஆகிய நூல்களை வெளியிட்டார்.[21]
தனது மூன்றாவது புத்தகத்திற்கான நேர்காணல்கள் மற்றும் அருங்காட்சியக வருகைகள் உட்பட்ட புத்தகங்களுக்கு தனது சொந்த ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார்.[22][23] பதிவுசெய்யப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரலாறுகளுக்கு அப்பால் ஆராய்ச்சி செய்தார். மோதலில் ஈடுபட்ட மக்களிடம் பேசி உண்மையைக் கண்டறிந்தார். இத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகள் 1971 என்ற புத்தகமாகும்.
மேற்கு பாக்கித்தானிலிருந்து கிழக்கு பாக்கித்தானைப் பிரித்து வங்காளதேசம் தோன்றிய 1971 ஆம் ஆண்டின் வரலாறு எப்போதும் நினைவில் இருக்கும். தொடர்புடைய மூன்று நாடுகள் - இந்தியா, பாக்கித்தாதான் மற்றும் வங்காளதேசம் - அனைத்தும் தெற்காசிய அரசியலின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது. இப்பகுதியில் உள்ள மற்ற மோதல்களைப் போலவே இதுவும் இந்தியா-பாக்கித்தானின் இருதரப்பு அரசியலால் கைப்பற்றப்பட்டது. மற்றொரு இந்திய-பாக்கித்தான் போராக இருபுறமும் கருதப்பட்டது. இந்த செயல்பாட்டில், மக்களின் வரலாறு மற்றும் வங்காள மக்களின் போராட்டம் மறைக்கப்படுகிறது. போன்ற கருத்துகளை வாய்மொழி வரலாற்றாசிரியர் அனாம் ஜகாரியா இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.[24][25][26]
பாக்கித்தானின் அரசாங்கத்தின் முன்னெடுப்பான புத்தாய்வு மாணவர் நிலை திட்டத்திற்கான அமைப்பின் தலைவராகவும் அனாம் உள்ளார். இந்த திட்டம் கைபர் பக்துன்வா அரசு, உலக வங்கி மற்றும் பாக்கித்தானுக்கான குறியீடு ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மை அமைப்பு ஆகும்.[27][28]
விருதுகள்
தொகு- இவரது பிரிவினையின் அடிசுவடுகள் புத்தகத்திற்காக [29] செருமன் அமைதிப் பரிசு கராச்சி இலக்கியத் திருவிழாவில் 2017 ஆம் ஆண்டு அனாமுக்கு வழங்கப்பட்டது.
புத்தகங்கள்
தொகு- பிரிவினையின் அடிச்சுவடுகள்: பாக்கித்தானியர்கள் மற்றும் இந்தியர்களின் நான்கு தலைமுறைகளின் கதைகள் (2015) [30][31][32]
- பெரும் பிளவுக்கு இடையே: பாக்கித்தான் - நிர்வகிக்கப்பட்ட காசுமீருக்கு ஒரு பயணம் (2018) [33][34][35]
- 1971: வங்காள தேசம், பாக்கித்தான் மற்றும் இந்திய மக்கள் வரலாறு (2019) : மேற்கு பாக்கித்தானிலிருந்து கிழக்கு பாக்கித்தானைப் பிரித்து வங்காளதேசம் தோன்றிய 1971 ஆம் ஆண்டின் வரலாறு எப்போதும் நினைவில் இருக்கும். தொடர்புடைய மூன்று நாடுகள் - இந்தியா, பாக்கித்தாதான் மற்றும் வங்காளதேசம் - அனைத்தும் தெற்காசிய அரசியலின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது. இப்பகுதியில் உள்ள மற்ற மோதல்களைப் போலவே இதுவும் இந்தியா-பாக்கித்தானின் இருதரப்பு அரசியலால் கைப்பற்றப்பட்டது. மற்றொரு இந்திய-பாக்கித்தான் போராக இருபுறமும் கருதப்பட்டது. இந்த செயல்பாட்டில், மக்களின் வரலாறு மற்றும் வங்காள மக்களின் போராட்டம் மறைக்கப்படுகிறது. போன்ற கருத்துகளை வாய்மொழி வரலாற்றாசிரியர் அனாம் ஜகாரியா இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.[36][37][38]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Book review: A journey of self-exploration". The Express Tribune (in ஆங்கிலம்). 2 August 2015. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Zakaria, Anam. "The story of a Kashmiri who crossed the Line of Control and returned to India 11 years later". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria | Al Jazeera News". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "With her new book on 1971 Indo-Pak war, Anam Zakaria attempts to understand one of the most defining years in South Asian history – Living News, Firstpost". Firstpost. 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "History repeating itself? Overcoming the legacy of partition in Pakistan". Peace Insight (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Where Kashmir Stands: Edited excerpt from Anam Zakaria's new book 'Between the Great Divide'". www.dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Sheikh, Saba. "A commendable national service". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Shamsie, Muneeza (1 December 2019). "Pakistan" (in en). The Journal of Commonwealth Literature 54 (4): 661–676. doi:10.1177/0021989419877066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9894. https://doi.org/10.1177/0021989419877066.
- ↑ "Expressions, passions about pushing the boundaries". The Nation (in ஆங்கிலம்). 29 November 2015. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Communications, South Asia Fast Track Sustainability (28 June 2018). "Q&A with Ms. Anam Zakaria, author of 'The Footprints of Partition' & development professional from Pakistan, on the criticality of oral-history narratives". South Asia Fast Track Sustainability Communications (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "FIF 2017: Pran Nevile's 'sentimental journey' – Pakistan". Dunya News. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Headstart School – Overview, Competitors, and Employees". Apollo.io. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Of and about LLF – Views-&-Opinions – The Financial Daily Epaper 01-03-2019". The Financial Daily Epaper. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "News stories for Anam Zakaria - DAWN.COM". www.dawn.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Zakaria, Anam (15 May 2020). "Women Face Dilemma in a War Zone: Risk the Blasts or Sexual Assault". https://www.nytimes.com/2020/05/15/world/asia/kashmir-pakistan-shelters-assault.html.
- ↑ Zakaria, Anam. "Remembering the war of 1971 in East Pakistan". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "1971 A People's History from Bangladesh, Pakistan and India by Anam Zakaria | Waterstones". www.waterstones.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Zakaria, Anam. "What a West Pakistani in the former East Pakistan during the Liberation War of 1971 remembers". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anum Zakria's: Between the great Divide". kashmiriat (in அமெரிக்க ஆங்கிலம்). 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria". HarperCollins (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Caravan, The. "1971: A People's History from Bangladesh, Pakistan and India". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Aslam, Irfan (5 January 2020). "NON-FICTION: SILENCED HISTORIES". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria Publishes Third Book, "1971: A People's History from Bangladesh, Pakistan and India"". Asia Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "1971: A People's History from Bangladesh, Pakistan and India | Literati | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Narrating a People's History of 1971". Jamhoor (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria". Code for All Global Summit (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Two-day Khayaal Festival featuring prominent figures ends in Lahore". ARY NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 29 November 2015. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "KLF GERMAN PEACE PRIZE – Karachi and Islamabad Literature Festivals". www.karachiliteraturefestival.org. Archived from the original on 2 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mirza, Farhad (9 August 2015). "REVIEW: The Footprints of Partition by Anam Zakaria". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Footprints of Partition: 'History has been linear'". The Express Tribune (in ஆங்கிலம்). 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "The Footprints of Partition: Narratives of Four Generations of Pakistanis and Indians". HarperCollins (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Review: Between the Great Divide: A Journey into Pakistan-Administered Kashmir byAman Zakaria". Hindustan Times (in ஆங்கிலம்). 26 October 2018. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Book Review: Between The Great Divide: A Journey into Pakistan-administered Kashmir". South Asia Journal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ Mirza, Farhad (9 September 2018). "NON-FICTION: OUR SLICE OF HEAVEN". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Anam Zakaria Publishes Third Book, "1971: A People's History from Bangladesh, Pakistan and India"". Asia Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "1971: A People's History from Bangladesh, Pakistan and India | Literati | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "Narrating a People's History of 1971". Jamhoor (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.