அனிதா பிரதாப்

அனிதா பிரதாப் செய்தியாளரும் எழுத்தாளருமான இவர் டைம் இதழ் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி சேவை போன்றவற்றில் பணியாற்றியவர். மேலும் போர்ச்சூழல்கள் நிறைந்த பிரதேசங்களில் போராளிகளின் வேண்டுதல்களையும் உயர்ந்த சமூகத்தினால் ஒடுக்கப்படும் சமூகத்தினரின் போராட்டங்கள் பற்றியும் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல பகுதிகளில் சென்று பலதரப்பட்டவர்களையும் பேட்டி எடுத்ததில் பெருமைக்குரியவர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேட்டி எடுத்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க்கொள்கைகள் மற்றும் தமிழீழ மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளின் இன்னல்கள் போன்றவற்றை தனது அனுபவத்தில் வெளிப்படுத்தும் விதமாக இவரால் வெளியிடப்பட்ட ஜலாண்ட் ஒஃவ் பிளட் (Island of blood) நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல் வெளியீடாகும். 2013ல் சிறிரத்தன என்ற உலக அளவிலான விருது கேரள கலா கேந்திரத்தால் அளிக்கப்பட்டது. கேரளாவிலுள்ள எர்ணாகுளம் மக்களவை தொகுதிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பாக 2014 தேர்தலில் போட்டியிட்டார்.

அனிதா பிரதாப்
பிறப்புஅனிதா சைமன்
திசம்பர் 23, 1958 (1958-12-23) (அகவை 61)
கோட்டயம், கேரளம்
தேசியம்இந்தியன்
பணிசெய்தியாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
பிரதாப் சந்தரன் (மணமுறிவு)
ஆர்னே ராய் வால்தர் (1999-தற்போது வரை)
பிள்ளைகள்சுபின் (மகன்)
வலைத்தளம்
www.anitapratap.com

தொடக்க வாழ்க்கைதொகு

அனிதா சைமன் என்று கோட்டயத்தில் சிரிய கத்தோலிக குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை டாடா குழுமத்தில் பணியாற்றினார். பல்வேறு இடங்களில் அவர் பணிபுரிந்ததால் குழந்தையாக இருந்தபோது அனிதா பதினொரு ஆண்டுகளில் ஏழு பள்ளிகளில் மாற்றி மாற்றி படிக்க வேண்டியிருந்தது. அவர் கேம்பிரிச் படிப்பை கொல்கத்தாவிலுள்ள லார்டோ பள்ளியில் முடித்தார். அவரது இளங்கலை படிப்பை டெல்லியிலுள்ள மிரண்டா அவுசில் 1978ல் நிறைவு செய்தார். இதழியல் பட்டயத்தை பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_பிரதாப்&oldid=2339204" இருந்து மீள்விக்கப்பட்டது