அனிருத்தா சிறீகாந்து

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அனிருத்தா சிறீகாந்து (Anirudha Srikkanth) ஓர் இந்திய முன்னாள் தொழில்முறை துடுப்பாட்ட வீரராவார். 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று சென்னையில் இவர் பிறந்தார்.[1] முன்னாள் தொழில்முறை துடுப்பாட்ட வீரரான கிருட்டிணமாச்சாரி சிறீகாந்து இவரது தந்தையாவார். இந்தியன் பிரீமியர் லீக்கு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சு மற்றும் சன்ரைசர்சு ஐதராபாத்து அணிகளுக்காக அனிருத்தா சிறீகாந்து விளையாடியுள்ளார்.[2]

அனிருத்தா சிறீகாந்து
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனிருத்தா சிரிகாந்த்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை 20 20 முதது
ஆட்டங்கள் 10 10
ஓட்டங்கள் 286 318
மட்டையாட்ட சராசரி 28.7 18.7
100கள்/50கள் -/1 -/2
அதியுயர் ஓட்டம் 64 86
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
மூலம்: [1], சூன் 24 2008

2003-04 ஐபிஎல் பருவத்தில் 16 வயது இளைஞனாக தனது தந்தையைப் போலவே ஒரு தாக்குதல் தொடக்க மட்டையாளராக அனிருத்தா தனது முதல் தர அறிமுகத்தை தொடங்கினார். தமிழ்நாடு ரஞ்சிக் கோப்பை அணியில் விளையாடினார். ஆனால் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் விளையாட்டு வடிவத்தில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினார். 2004-05 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான இங்கிலாந்து சுற்றுலா பயணத்தில் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் அடித்து முதலிடம் பிடித்தார்.[3] 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான இருபது20 போட்டியில் மூன்றாவது அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் செய்தார்.[4]

ஆர்த்தி வெங்கடேசு என்ற வடிவழகியை இவர் திருமணம் செய்து கோண்டார்.

ஐ.பி.எல் போட்டிகள்

தொகு

இந்தியன் பிரீமியர் லீக்கு போட்டிகளில் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்சு அணிக்காக விளையாடியுள்ளார். 2010 டெக்கான் சார்ச்சர்சு அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இவர் 15 பந்துகளில் 2 ஆறு ரன்கள் மற்றும் ஒரு நான்கு என 24 ஓட்டங்கள் எடுத்தார். 2012 பருவத்தில் இவர் இராசத்தான் ராயல்சு அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்தார்.[5]

2014 பருவத்தில் சன்ரைசர்சு ஐதராபாத் அணி இவரை வாங்கியது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Srikkanth Anirudha Profile - Cricket Player India | Stats, Records, Video". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  2. Shenoy, Sonali (2023-02-03). "Ex CSK batsman Anirudha Srikkanth talks about his debut as commentator at the SA20". Indulge Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  3. "England Under-19s in India Youth ODI Series, 2004/05 Records - Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  4. "Inter State Twenty-20 Tournament, 2006/07 Records - Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  5. "Rajasthan Royals v Chennai Super Kings, 56th match (N), Jaipur, May 10, 2012". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.
  6. Binoy, George (13 February 2014). "Rajasthan buy lots for less, KXIP strong". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்தா_சிறீகாந்து&oldid=4103154" இலிருந்து மீள்விக்கப்பட்டது