அனில் பாசு
அனில் பாசு (Anil Basu; 7 நவம்பர் 1946-2 அக்டோபர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
அனில் பாசு | |
---|---|
உறுப்பினர் ஆரம்பாக் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1984-2009 | |
முன்னையவர் | பைஜோய் கிருஷ்ணா மோதக் |
பின்னவர் | சக்தி மோகன் மாலிக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹூக்ளி, மேற்கு வங்காளம் | 7 நவம்பர் 1946
இறப்பு | 2 அக்டோபர் 2018 கொல்கத்தா |
அரசியல் கட்சி | இபொக(மா) |
துணைவர் | சபீதா பாசு |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
வாழிடம்(s) | கூக்ளி-சூச்சுரா, ஹூக்ளி |
As of 26 அக்டோபர், 2024 மூலம்: [1] |
1966ஆம் ஆண்டு உணவு இயக்கத்தின் போது இவர் இந்தியப் பொதுவுடமைக் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவில் சேர்ந்தார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் 1967இல் சின்சுரா உள்ளாட்சிக் குழுவில் சேர்ந்த இவர், 1970இல் மண்டலச் செயலாளரானார். 1971இல் உள்ளாட்சிக் குழுச் செயலாளர், 1974இல் மண்டலக் குழு உறுப்பினர், 1981இல் மண்டலக் குழுச் செயலாளராகப் பொறுப்பேற்ற இவர் மாவட்டக் குழுவிலும் சேர்க்கப்பட்டார். 1984ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் ஆரம்பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 8ஆவது மக்களவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைன்பாரி கொலையில் இவர் நேரடியாக ஈடுபட்டார்.[1] இவர் மம்தா பானர்ஜி பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்காக இவர் தனது சொந்தக் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.[2] 2012ஆம் ஆண்டில், பாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலிருந்து (மார்க்சிஸ்ட்) கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டார்.
சாதனை வெற்றி
தொகு2004 மக்களவைத் தேர்தலில், பாசு ஆரம்பாக் மக்களவைத் தொகுதியில் 592,502 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது நாட்டின் மக்களவைத் தேர்தலில் மிக உயர்ந்த வெற்றி வித்தியாசமாகும். இதனை பாஜகவின் பிரீத்தம் முண்டே 696,321 வாக்குகள் வித்தியாசத்தில் மகாராட்டிரா பீடூ மக்களவைத் தேர்தலில் நிகழ்த்தினார்.[3]ஆனால் இது இடைத்தேர்தல் வெற்றி என்பதால் இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.[4][5][6] குசராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி. ஆர். பாட்டீல் 6.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Burdwan Sainbari Case - WikiEducator".
- ↑ Official biographical sketch in Parliament of India website பரணிடப்பட்டது 23 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lok Sabha polls: CPM's Anil Basu holds record for highest victory margin". The Times of India. 3 April 2014. http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Lok-Sabha-polls-CPMs-Anil-Basu-holds-record-for-highest-victory-margin/articleshow/33150711.cms.
- ↑ "Munde's daughter Pritam wins Beed Lok Sabha bypoll by record margin". The Times of India. 19 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "Munde's daughter breaks Modi's Lok Sabha record". India Today. 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "ConstituencyWise-All Candidates". Archived from the original on 25 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "ConstituencyWise-All Candidates". 24 May 2019.
வெளி இணைப்புகள்
தொகுவெளி ஒளிதங்கள் | |
---|---|
யூடியூபில் CPI(M) leader Anil Basu abusing Mamata Banerjee |