அனுக் அருட்பிரகாசம்
அனுக் அருட்பிரகாசம் (Anuk Arudpragasam; பிறப்பு: 1988) இலங்கைத் தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி வருகிறார். இவரது முதலாவது புதினம் The Story of a Brief Marriage (ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை) 20216 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியானது. இது பிரான்சியம், செருமானியம், செக், மான்டரின், இடச்சு, இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட இப்புதினம், 2017 ஆம் ஆண்டில் தெற்காசிய இலக்கியத்துக்கான டி.எஸ்.சி பரிசைப் பெற்றது. அத்துடன் டிலான் தோமசு பரிசுக்கும்,[1] செருமனியின் பன்னாட்டு இலக்கிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.[2] 2021 இல் வெளியான இவரது இரண்டாவது புதினம் A Passage North (வடக்கிற்கான ஒரு பாதை) மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இலங்கையின் போர்க்காலத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த, வடக்கினையும், நூலாசிரியரின் அனுபவங்களையும் கொண்டதாக இப்புதினம் அமைந்துள்ளது.
அனுக் அருட்பிரகாசம் Anuk Arudpragasam | |
---|---|
பிறப்பு | 1988 (அகவை 35–36) |
தொழில் | புதின எழுத்தாளர் |
கல்வி நிலையம் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை) கொலம்பியா பல்கலைக்கழகம் (முனைவர்) |
இணையதளம் | |
www |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஅனுக் அருட்பிரகாசம் 1988 இல் கொழும்பில் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தார்.[3][4] தனது 18-வது அகவையில் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்கா சென்றார். 2010 இல் பட்டப்படிப்பை முடித்த பின்னர்,[4][5] ஓராண்டு காலம் தமிழ்நாட்டில் வசித்து வந்தார்.[6] பின்னர் முனைவர் பட்டப் படிப்புக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் சென்று அங்கு 2019 இல் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[7]
எழுதிய நூல்கள்
தொகுஒரு சுருக்கமான திருமணத்தின் கதை (2016)
தொகு2011-2014 காலப்பகுதியில் எழுதப்பட்ட The Story of a Brief Marriage என்ற புதினம், தாம் தஞ்சமடைந்திருந்த வடகிழக்குக் கரையோர முகாம் ஒன்றின் மீது இலங்கை இராணுவம் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தியதால் திருமணத்திற்கு தள்ளப்பட்ட இரண்டு இளம் தமிழர்களான தினேஷ், கங்கா ஆகியோரின் வாழ்க்கையின் ஒரு இரவையும், ஒரு பகலையும் விவரிக்கிறது.[8] த நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு விமர்சனம், "அப்பாவிகளுக்கு வரலாற்றில் இடம் கொடுத்ததற்காக" இப்புதினத்தைப் பாராட்டியது[9] வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை "அட்டூழியத்திலிருந்து சிறு கலைப் படைப்பு" எனப் பாராட்டியது.[10]
வடக்கிற்கான ஒரு பாதை (2021)
தொகுஅனுக்கின் இரண்டாவது புதினம், A Passage North 2021 மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[11] இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் அழிவுகளின் பின்னணியில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முயற்சியே இப்புதினம். "'வடக்கிற்கான ஒரு பாதை' என்பது வன்முறையைத் தொலைவில் இருந்து பார்ப்பதை விட, அதை நெருங்கி அனுபவிப்பதைக் காட்டிலும் அதிகம், இது இலங்கை உள்நாட்டுப் போரைப் பற்றிய தனது சொந்த அனுபவத்திற்கு நெருக்கமானது," என அனுக் கூறுகிறார்.[12]
அனுக் அருட்பிரகாசம் தற்போது தனது மூன்றாவது புதினத்தை எழுதி வருகிறார். இது "புலம்பெயர்ந்த தமிழ்த் தாய்மார்கள் மற்றும் மகள்கள் பற்றியது", இதன் களம் ஒரு பகுதி நியூயார்க்கிலும், ஒரு பகுதி தொராண்டோவிலும் அமைக்கப்பட்டது.[13]
விருதுகள்
தொகு- அன்னிய மொழிக்கான தமிழ் இலக்கியத் தோட்ட விருது (2017)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dylan Thomas prize: Shortlist for 2017 award announced". March 28, 2017. https://www.bbc.com/news/uk-wales-39419055. பார்த்த நாள்: October 24, 2018.
- ↑ "The 2018 List". https://www.hkw.de/en/programm/projekte/2018/internationaler_literaturpreis_2018/shortlist_2/shortlist2018.php. பார்த்த நாள்: October 24, 2018.
- ↑ "Q&A with author Anuk Arudpragasam". Financial Times. 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ 4.0 4.1 "'A Small Window of Consciousness': An Interview With Anuk Arudpragasam". Pacific Standard. 16 September 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ Nair, Nandini (9 November 2016). "A War in Memory". Open. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ Filgate, Michele (28 September 2016). "A Body in Common: Anuk Arudpragasam". The Barnes & Noble Review. Archived from the original on 15 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Institute for Ideas and Imagination Announces Third Class of Fellows". news.columbia.edu. 15 May 2020. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ "Anuk Arudpragasam: Within the Bounds of the Body". January 24, 2017. https://www.guernicamag.com/anuk-arudpragasam-within-the-bounds-of-the-body/. பார்த்த நாள்: October 24, 2018.
- ↑ "A Brave Debut Novel About the Sri Lankan Civil War". October 7, 2016. https://www.nytimes.com/2016/10/09/books/review/anuk-arudpragasam-story-of-a-brief-marriage.html. பார்த்த நாள்: October 24, 2018.
- ↑ "Sam Sacks on Jonathan Safran Foer's New Novel". September 3, 2016. https://www.wsj.com/articles/sam-sacks-on-jonathan-safran-foers-new-novel-1472841943. பார்த்த நாள்: October 24, 2018.
- ↑ Flood, Alison (14 September 2021). "Nadifa Mohamed is sole British writer to make Booker prize shortlist". தி கார்டியன். https://www.theguardian.com/books/2021/sep/14/nadifa-mohamed-sole-british-writer-booker-prize-shortlist-2021.
- ↑ "Anuk Arudpragasam Q&A | The Booker Prizes". thebookerprizes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
- ↑ "Anuk Arudpragasam Q&A". thebookerprizes.com. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.