அனுசாட்
அண்ணா பல்கலைக்கழகச் செயற்கைக்கோள் (Anna University Satellite) அல்லது அனுசாட் (ANUSAT) என்பது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் வான்வெளி பொறியியல் (Aerospace Engineering) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி-சி12 (PSLV C-12) மூலம் ரிசாட்-2 என்ற செயற்கைக்கோளுடன் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டது. இது சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏப்ரல் 20, 2009 அன்று இந்திய நேரப்படி காலை 6.45க்கு ஏவப்பட்டது.
இயக்குபவர் | அண்ணா பல்கலைக்கழகம், MIT வளாகம், சென்னை |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | இஸ்ரோ |
திட்ட வகை | தொழில்சாரா வானொலி தொழில்நுட்பம் (Amateur radio Technology) |
ஏவப்பட்ட நாள் | 20 ஏப்ரல் 2009 01:15 GMT |
ஏவிய விறிசு | PSLV-CA C12 |
ஏவு தளம் | SDSC சதீஸ் தவான் விண்வெளி மைய இரண்டாவது ஏவுதளம் |
நிறை | 40 கிலோகிராம்கள் (88 lb) |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | சூரிய ஒத்திசைவு வட்டப்பாதை |
சாய்வு | 41° |
சேய்மைநிலை | 550.0 கிலோமீட்டர்கள் (341.8 mi) |
அண்மைநிலை | 550.0 கிலோமீட்டர்கள் (341.8 mi) |
சுற்றுக்காலம் | 90 நிமிடங்கள் |
இந்தச் செயற்கைக்கோள் மேம்பாடு இஸ்ரோவின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகுகுறிப்பு
தொகு- அதிகாரப்பூர்வமான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஏதும் இச்செயற்கைக்கோளுக்குத் தரப்படவில்லை. இது அனுசாட் என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. எனவே அணுசாட் என்ற பெயரும் ஏற்புடையதே.
வெளியிணைப்பு
தொகு- அனுசாட் இணையப்பக்கம் பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்