அனுபமா கோகலே

இந்திய சதுரங்க வீராங்கனை

அனுபமா கோகலே (Anupama Gokhale) என்பவர் ஒர் இந்திய சதுரங்க விளையாட்டு வீரராவார்[1]. இவர் 1969 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் மும்பையில் அனுபமா அபயங்கராகப் பிறந்தார். 1989, 1990, 1991, 1993,மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை அனுபமா இந்திய பெண்கள் சாம்பியன் பட்டத்தை வென்றார். 1985 ஆம் ஆண்டு அடிலெயிட் நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் பெண்கள் சாம்பியன் பட்டத்தை மலேசியா வீராங்கனை ஆத்ரே ஓங் குடன் இணையாக வெற்றி பெற்றார். இவ் வெற்றி இருவருக்கும் அனைத்துலக பெண்கள் மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது[2]

1988,1990[3] மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்திய சதுரங்க குழுவின் சார்பாக விளையாடினார். மேலும் ஆசிய பெண்கள் சதுரங்க சாம்பியன் போட்டியில் இரண்டு முறை 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பங்குபெற்றார். பின் 2005 ஆம் ஆண்டில் இவர் விளையாடிய குழு வெள்ளி பதக்கம் வென்றது[4]

கோகலே பத்மசிறீ பதக்கத்தை 1986 [5] ஆம் ஆண்டு பெற்றார். பின் 1990 ஆம் ஆண்டு அருச்சுனா பதக்கத்தை வென்றார். இவருக்கு 16 வயது இருக்கும் போது அருச்சுனா பதக்கம் கிடைத்தது. இளம் வயதில் பத்மசிறீ பதக்கம் வென்ற பெறுமை பெற்றவர்.

துரோணாச்சாரியா விருது பெற்ற சதுரங்க விளையாடு வீரர் இரகு நந்தன் கோகலேவை மணந்தார். இவர் பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Gokhale, Anupama FIDE rating history, 1986-2001 at OlimpBase.org
  2. Quah Seng Sun (25 April 2008). "Out of Limbo". The Star. http://www.thestar.com.my/story/?file=%2F2008%2F4%2F25%2Flifeliving%2F21043960&sec=lifeliving. பார்த்த நாள்: 11 January 2016. 
  3. Anupama Abhyankar team chess record at Olimpbase.org
  4. Anupama Gokhale team chess record at Olimpbase.org
  5. "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs, Government of India. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_கோகலே&oldid=3586050" இலிருந்து மீள்விக்கப்பட்டது