அனுபம் மிஸ்ரா

காந்தியவாதி

அனுபம் மிஸ்ரா (ஆங்கிலம்: Anupam Mishra, இந்தி:i: अनुपम मिश्र, உருது : انوپم مشرا‎) இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.[1][2][3]

அனுபம் மிஸ்ரா
பிறப்பு5 சூன் 1947
மத்தியப் பிரதேசம்
இறப்பு19 திசம்பர் 2016 (அகவை 69)

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகளைப் பற்றி ஆராய்ந்து, குளங்களின் வரலாறு குறித்து இவர் எழுதிய 'The ponds are still relevant' என்னும் புத்தகம் மிக முக்கியமானது. இந்நூலை 'குளங்கள் இன்றும் உயிர்வாழ்கின்றன' (யாழிசைப் பதிப்பக வெளியீடு-2017), 'குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு' (தன்னறம் வெளியீடு-2018) என்னும் பெயர்களில் தமிழில் வெளிவந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபம்_மிஸ்ரா&oldid=3915514" இலிருந்து மீள்விக்கப்பட்டது