அனுமன் சாலிசா

அனுமன் சாலிசா (இந்தி: हनुमान चालीसा "அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்கள்") என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும்.[1] துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும்.[2][3]

அனுமன் சாலிசா
Hanuman Chalisa
அனுமன் பக்திப் பஜனைப் பாடல்
நூலாசிரியர்துளசிதாசர்
நாடுஇந்தியா
மொழிஅவாதி
வகைபக்தி இலக்கியம்

கடவுள் அனுமன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம் மேலும் ஸ்ரீ அனுமனின் அருளைப்பெற கோடிக்கணக்கானவர்கள் சாலிசாவைப் பாடுகிறார்கள்.

மேன்மை தொகு

தற்போதைய இந்துக்களிடையே ஹனுமன் சாலிசா அதிமாகப் பிரபலமடைந்துள்ளது. பலர் இதை தினமும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாக செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறைவணக்கத்தின் போது துதிக்கின்றனர்.

அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தை யைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.

அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள் தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்புதவிகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமன்_சாலிசா&oldid=3708103" இருந்து மீள்விக்கப்பட்டது