அனுராதா சர்மா புஜாரி

அனுராதா சர்மா புஜாரி (Anuradha Sharma Pujari அசாமி: অনুুরাধা শৰ্মা পূজারী) (பிறப்பு 1964) ஓர் அசாமிய பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்.[1] இவர் சடின் [2] மற்றும் சத்சோரி ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார்.[3] அசாமிய இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளில் புனைகதை மற்றும் கட்டுரைகள் அடங்கும்.[4] இவர் குவகாத்தியில் உள்ள பஞ்சாபரியில் வசிக்கிறார். அவரது முதல் புதினம் ஹிருதய் ஏக் பிக்யாபன் ஆகும், இது அசாம் இளைஞர்களிடையே பரவலாக அறியப்பட்டது. இயாத் ஏகோன் ஆரண்ய அசில் எனும் புதினத்திற்காக 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெறுகிறார்.[5]

அனுராதா சர்மா புஜாரி
பிறப்பு1964
ஜோர்ஹாட், அசாம், இந்தியா
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கவிஞர்
தேசியம்இந்தியன்
காலம்1997–தற்போது வரை.
வகைஅசாமிய இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சத்சோரி ,சடின்,தி ஹார்ட்ஸ் எ ஷோபிஸ் என்ற
குறிப்பிடத்தக்க விருதுகள்குமார் கிஷோர் நினைவு இலக்கிய விருது
கையொப்பம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஜோர்ஹாட்டில் பிறந்த இவர், டிப்ருகட் பல்கலைக்கழகத்தில் சமூகவியலையும், கொல்கத்தாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் சயின்சஸில் பத்திரிகை துறையிலும் பயின்றார். அசோம் பானி வார லட்டர்ஸ் பிரம் கொல்கத்தா என்ற கட்டுரையின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார் மற்றும் தி ஹார்ட்ஸ் எ ஷோபிஸ் என்ற புதினத்தின் மூலம் பரவலான புகழினைப்பெற்றார். முதன்முதலில் 1998 இல் வெளியிடப்பட்டது, இது ஹோமன் போர்கோஹைனால் நவீன இலக்கியம் என்று பாராட்டப்பட்டது. நவீன அசாமிய வாழ்க்கையைப் பற்றி வேறு எந்த எழுத்தாளரும் எழுப்பாத சில அடிப்படைக் கேள்விகளை இது எழுப்பியதாக அவரது விமர்சனம் இருந்தது. இந்தப்புதினம் 14 பதிப்புகளாக வெளியாகி விமர்சன மற்றும் வணிக ரீதியில் வெற்றியை அளித்தது.[6]

விருதுகள் தொகு

சான்றுகள் தொகு

  1. Kashyap, Aruni (2 July 2008). "An Interview With Anuradha Sharma Pujari". My Xofura (Blog). Archived from the original on 5 August 2010.
  2. Choudhury, Shankhadeep (23 January 2002). "Jounalist [sic] accused of blackmail in Assam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் February 17, 2018. Anuradha Sharma Pujari, editor of the popular Assamese weekly, Sadin, which carried the controversial story, stood by the report.
  3. "Anuradha Sharma Pujari". Online Sivasagar.
  4. Choudhury, Bibhash (January–February 2008). "Assamese Short Story". Muse India (17). http://www.museindia.com/showfocus6.asp?id=797. பார்த்த நாள்: 2008-11-14. 
  5. Desk, Digital (2021-12-30). "Anuradha Sharma Pujari Wins Sahitya Akademi Award 2021 » News Live TV » Assam". News Live TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  6. "That Disgusting Photograph". My Xofura (Blog). November 2006.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_சர்மா_புஜாரி&oldid=3742380" இலிருந்து மீள்விக்கப்பட்டது