அனுராதா டி கே

இந்திய அறிவியலாளர்

அனுராதா டி. கே ஒரு இந்திய விண்வெளித்துறையின் அறிவியலாளர் ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் என்ற பிரிவின் திட்ட இயக்குநர் ஆவார்.[1] இவர் ஜிசாட்-12 மற்றும் ஜிசாட்-10 செயற்கைக்கோள்களை செலுத்துவதில் பணிப்புரிந்தார்.[2] 1982இல் விண்வெளி நிறுவனத்தில் இணைந்த இஸ்ரோவின் மூத்த பெண் விஞ்ஞானியும் மற்றும் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய முதல் பெண்ணும் ஆவார்.[3] >

அனுராதா டி. கே
பிறப்புபெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா
வாழிடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)
கல்வி கற்ற இடங்கள்விஸ்வரேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரி, பெங்களூர்

இளமைக்காலமும் கல்வியும்

தொகு

அனுராதா டி. கே மைசூர் மாநிலத்தில் உள்ள (இப்போது கருநாடகம்) பெங்களூரில் இல் பிறந்தார். இவர் பெங்களூரில் உள்ள விஸ்வரேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் மின்னணு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[4]

தொழில்

தொகு

அனுராதா டி. கே. இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் இந்திய புவியியல்சார் செயற்கைக்கோள் பிரிவு திட்ட இயக்குனராக பணியாற்றுகிறார். இவர் பூகோள-ஒத்திசைவான செயற்கைக்கோள்களின் பிரிவில் பணிபுரிகிறார். இவை தொலைத் தொடர்பு மற்றும் தரவு இணைப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியமானவை.[5]

பல இந்திய விண்வெளித் திட்டங்களில் அவர் ஒரு முன்னணி நபராக இருந்துள்ளார். அனுராதாவின் பங்கு, சூலை 15, 2011 அன்று சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியதே ஆகும், அவர் 20 பொறியாளர்களின் தொழில்நுட்பக் குழுவினை மேற்பார்வையிட்டார். ஜிசாட்-12 உடன் இணைந்து பணியாற்றிய பிறகு, அனுராதா டி. கே. 2012 செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-10 தலைமையேற்று அனுப்பினார்.

திட்ட இயக்குனராக, அவர் ஜிசாட்-9, ஜிசாட்-17 மற்றும் ஜிசாட்-18 தொடர்பு செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தினார். இந்திய தொலைதூர உணர்திறன் நிறுவனம் மற்றும் இந்திய மண்டல ஊடுருவல் செயற்கைகோள் திட்டங்களுக்கான திட்ட மேலாளராக, மண்டல திட்ட இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது சிறப்பு செயற்கைக்கோள் புதுப்பிப்பு அமைப்புகள் ஆகும், இது விண்வெளியில் இருக்கும்போது ஒரு செயற்கைக்கோள் செயல்திறனைக் கண்காணிக்கும்.[6]

விருதுகள்

தொகு
  • விண்வெளி அறிவியல் துறையில் சிறந்த சேவைகளுக்கான விண்வெளி தங்க பதக்கம் விருது 2003 ல் இந்திய வானியல் சங்கத்தால் வழங்கப்பட்டது.
  • 2011ல் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் மூலம் சுமன் சர்மா விருது வழங்கப்பட்டது.
  • 2012 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு விருது.
  • ஜிசாட் -12ல் பணியாற்றியதற்காக குழு தலைவருக்கான விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.indiatimes.com/news/india/8-awesome-isro-scientists-who-happen-to-be-women-271697.html
  2. http://www.bbc.com/news/world-asia-india-382534711982[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://news.biharprabha.com/2012/04/meet-the-lady-behind-success-of-risat-i/
  4. "அனுராதா டி. கே வாழ்க்கை வரலாறு". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-03-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. http://wiesummit.ieeer10.org/smt-t-k-anuradha/
  6. "இந்தியாவின் பெரிய செயற்கைக்கோளை அனுப்பிய பெண்". Archived from the original on 2017-03-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_டி_கே&oldid=4161444" இலிருந்து மீள்விக்கப்பட்டது