அனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்து
தமிழ்நாட்டின் மதுரை சந்திப்பு முதல் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் சந்திப்பு வரை தென்னிந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட தொடருந்து அனவ்ரத் குளிர்சாதன அதிவிரைவு தொடருந்து ஆகும். இந்த தொடருந்து 22631, 22632 ஆகிய எண்களில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை சந்திப்பு முதல் பிகானீர் சந்திப்பு வரை இயக்கப்படும் தொடருந்து 22631 என்ற எண்ணிலும் பிகானீர் சந்திப்பு முதல் மதுரை சந்திப்பு வரை இயக்கப்படும் தொடருந்து 22632 என்ற எண்ணிலும் இயங்கி வருகின்றன. இந்த தொடருந்து தமிழ்நாடு , ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வழியாக பயணிக்கிறது.
அனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்து | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | குளிரூட்டப்பட்ட தொடருந்து |
முதல் சேவை | 27 March 2014 [1] |
நடத்துனர்(கள்) | தென்னிந்திய ரயில்வே |
வழி | |
தொடக்கம் | மதுரை சந்திப்பு |
இடைநிறுத்தங்கள் | 40 |
முடிவு | பிகானீர் சந்திப்பு |
ஓடும் தூரம் | 3,060 km (1,901 mi) |
சேவைகளின் காலஅளவு | வாரம் ஒரு முறை |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | முதலாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஈரடுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஈரடுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், மூன்றடுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், சமையலறை பெட்டி |
இருக்கை வசதி | வசதி இல்லை |
படுக்கை வசதி | வசதி உண்டு |
உணவு வசதிகள் | வசதி உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | Standard Indian Railways LHB Coaches |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge |
வேகம் | 140 km/h (87 mph) maximum ,56 km/h (35 mph), including halts |
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி [2] முதல் இயக்கப்பட்டு வரும் இந்த தொடருந்து ஆரம்பத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் தொடருந்து நிலையம், சென்னை முதல் பிகானீர் சந்திப்பு தொடருந்து நிலையம் வரை இயங்கி வந்தது.[3] 2019ஆம் ஆண்டு மார்ச் ஆறாம் தேதி முதல் இந்த தொடர்ந்து மதுரை சந்திப்பு நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு மதுரை சந்திப்பு முதல் பிகானீர் சந்திப்பு வரை இயங்கி வருகிறது [4]
பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு
தொகுமுதலாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு ஈரடுக்கு குளிர்சாதன பெட்டிகள் நான்கு, இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் பன்னிரெண்டு, இழுவை இயந்திரப் பெட்டிகள் இரண்டு, சமையலறை பெட்டி ஒன்று என மொத்தம் இருபத்து இரண்டு பெட்டிகள் இந்த அனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது [5]
பயணிகளின் எண்ணிக்கை, திருவிழா காலம், நிர்வாக காரணங்களால் ரயில்வே துறையினரால் பயணப் பெட்டிகள் மாற்றப்படலாம்.
வழித்தடமும் நிறுத்தங்களும்
தொகுஅனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்து வாரத்திற்கு ஒரு முறை மதுரை சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, சென்னை எக்மோர் சந்திப்பு, கூடூர் சந்திப்பு, நெல்லூர் சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, வாரங்கல் சந்திப்பு , ராமகுண்டம் சந்திப்பு, பல்கர்ஷா சந்திப்பு, நாக்பூர், இட்டர்சி சந்திப்பு, போபால் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு, நாக்டா சந்திப்பு, கோடா சந்திப்பு, சவாய் மதோபோர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு நிலையங்களின் வழியாக இயக்கப்பட்டு பிகானீர் சந்திப்பு நிலையத்தை வந்தடைகிறது. [6] [7] [8]
நாக்டா சந்திப்பு, சவாய் மதோபோர் சந்திப்பு என இரு இடங்களில் இந்த தொடருந்து தனது பயணத் திசையை மாற்றுகிறது.
இழுவை இயந்திரம்
தொகுமதுரை சந்திப்பு முதல் பிகானீர் சந்திப்பு வரை இருப்புப்பாதை முழுவதுமாக இன்னமும் மின்சார மயமாக்கப்படவில்லை எனவே மதுரை சந்திப்பு முதல் சவாய் மதோபோர் சந்திப்பு வரை அரக்கோணம் சந்திப்பு அல்லது இட்டர்சி சந்திப்பு நிலையங்களால் பராமரிக்கப்படும் WAP 4 என்ற மின்சார இழுவை இயந்திரம் மூலமோ அல்லது அரக்கோணம் சந்திப்பு அல்லது விசாகப்பட்டினம் சந்திப்பு நிலையங்களால் பராமரிக்கப்படும் WAM 4 [9] என்ற மின்சார இழுவை இயந்திரத்தின் மூலமோ இயக்கப்படுகிறது. அங்கிருந்து அபு சாலை நிலையம் மூலம் பராமரிக்கப்படும் WDM 2 அல்லது WDM 3A போன்ற டீசல் இழுவை இயந்திரத்தின் மூலமாகவோ அல்லது பகத் கி கோத்தி நிலையத்தின் மூலம் பராமரிக்கப்படும் WDP 4 என்ற டீசல் இயந்திரத்தின் மூலமாகவோ இழுக்கப்பட்டு இறுதி நிலையத்தை அடைகிறது.
வண்டி எண் 22631
தொகுஅனுவ்ரத் குளிரூட்டப்பட்ட அதிவிரைவு தொடருந்து வண்டியானது மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 11.55 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, சென்னை எக்மோர் சந்திப்பு, கூடூர் சந்திப்பு, நெல்லூர் சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, வாரங்கல் சந்திப்பு , ராமகுண்டம் சந்திப்பு, பல்கர் ஷா சந்திப்பு, நாக்பூர், இட்டர்சி சந்திப்பு, போபால் சந்திப்பு, உஜ்ஜைன் சந்திப்பு, நாக்டா சந்திப்பு, கோடா சந்திப்பு, சவாய் மதோபோர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு 40 நிறுத்தங்களையும் 465 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 53 மணி 50 நிமிடங்கள் பயணித்து பிகானீர் தொடருந்து நிலையத்தை இரண்டாம் நாள் (சனிக்கிழமை) மாலை 05.45 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 3060 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் கொன்டபள்ளி மற்றும் மணிகார்க் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி இந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[10]
வண்டி எண் 22632
தொகுமறுமார்க்கமாக 22632 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது பிகானீர் தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு இயக்கப்பட்டு 40 நிறுத்தங்களையும் 465 நிலையங்களையும் கடக்க சராசரியாக மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 51 மணி 40 நிமிடங்கள் பயணித்து மதுரை சந்திப்பு நிலையத்தை மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 06.40 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 3060 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக கொன்டபள்ளி, மணிகார்க் நிலையம் வரை மணிக்கு 120 கிலோமீட்டர் வரை இந்தத் தொடருந்து இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[11]
இந்த தொடருந்தின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர்களுக்கு மேல் இருப்பதால் இந்திய ரயில்வே சட்டத்தின்படி அதிவிரைவுக்கான கூடுதல் கட்டணம் பயண கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://web.archive.org/web/20140523061629/http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=1924&id=0%2C4%2C268, archived from the original on 2014-05-23, பார்க்கப்பட்ட நாள் 2019-12-14
{{citation}}
: Missing or empty|title=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ https://web.archive.org/web/20140523061629/http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=1924&id=0%2C4%2C268, archived from the original on 2014-05-23, பார்க்கப்பட்ட நாள் 2019-12-14
{{citation}}
: Missing or empty|title=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ introduction of new train
- ↑ extension of train services
- ↑ https://web.archive.org/web/20140523061629/http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=1924&id=0%2C4%2C268, archived from the original on 2014-05-23, பார்க்கப்பட்ட நாள் 2019-12-14
{{citation}}
: Missing or empty|title=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-weekly-train-service-between-chennai-central-bikaner/article5817200.ece
{{citation}}
: Missing or empty|title=
(help) - ↑ http://www.sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=1924&id=0,4,268
{{citation}}
: Missing or empty|title=
(help) - ↑ http://trainspy.com/static/train/22631/BKN-AC-SF-EXP
{{citation}}
: Missing or empty|title=
(help) - ↑ http://www.youtube.com/watch?v=FM4q2HGiKGA
{{citation}}
: Missing or empty|title=
(help) - ↑ https://indiarailinfo.com/train/-train-anuvrat-ac-sf-express-22631/22044/790/117.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://indiarailinfo.com/train/-train-anuvrat-ac-sf-express-22632/22045/117/790.
{{cite web}}
: Missing or empty|title=
(help)