அனுஷம் (பஞ்சாங்கம்)
அனுஷம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 17 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அனுஷ நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அனுஷ நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" அனுசம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினேழாவது நட்சத்திரமாகிய அனுஷம் 213° 20'க்கும் 226° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் அனுஷத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக விருச்சிக இராசியில் அமைந்துள்ளது.
பெயரும் அடையாளக் குறியீடும்
தொகுஇந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுச நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமசுக்கிருதப் பெயரான அனுராத (Anuraadha) என்பது "தெய்வீக ஒளியின் சீடர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "தாமரை" ஆகும்.
சோதிடத்தில் அனுஷம்
தொகுஇயல்புகள்
தொகுஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. அனுச நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]
கோள் | சனி |
தேவதை | மித்திரன் |
தன்மை | மென்மை |
சாதி | பஞ்சம சாதி |
கோத்திரம் | புலத்தியர் |
பால் | ஆண் |
குணம் | தேவ குணம் |
இயற்கை மூலம் | நெருப்பு |
விலங்கு | பெண் மான் |
பறவை | வானம்பாடி |
மரம் | மகிழ மரம் |
நாடி | சுழுமுனை |
குறிப்புக்கள்
தொகு- ↑ Raman, B. V., 1992. பக். 40.
- ↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
- ↑ Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.
உசாத்துணைகள்
தொகு- Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
- வெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.
- Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.