அனுஸ்ரீ (கன்னட நடிகை)

இந்திய நடிகை

அனுஸ்ரீ (Anushree; பிறப்பு 25 ஜனவரி 1988  ) ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் கன்னட படங்களில் தோன்றும் நடிகை ஆவார்.[1] இவர் கன்னட தொலைக்காட்சியில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கன்னட திரைப்பட நடிகையானார், இவர் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். பெரும்பாலும் கன்னட மொழி படங்களில் தோன்றினார். இவர் கர்நாடக மாநில திரைப்பட விருதுகளை வென்றார் . முரளி மீட்ஸ் மீரா படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருது பெற்றவராக அறியப்படுகிறார்.

அனுஸ்ரீ (கன்னட நடிகை)
பிறப்புசனவரி 25, 1987 (1987-01-25) (அகவை 37)
சூரத்கல், கருநாடகம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மங்களூர் பல்கலைக்கழகம்
பணிதொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடங்கள்Anushree Anchor
செயலில் இருந்த ஆண்டுகள்2019–தற்போது வரை
காணொளி வகை(கள்)
  • பொழுதுபோக்கு
சந்தாதாரர்கள்758 ஆயிரம்
மொத்தப் பார்வைகள்72 மில்லியன்

செப்டம்பர் 1, 2022 அன்று தகவமைக்கப்பட்டது

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அனுஸ்ரீ, இந்தியாவின் கர்நாடகா , மங்களூரில் உள்ள சூரத்கல்லில் சம்பத் மற்றும் சசிகலாவின் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[2] இவருக்கு அபிஜீத் என்ற இளைய சகோதரர் உள்ளார். இவரது சிறுவயதிலேயே இவருடைய பெற்றோர் பிரிந்துவிட்டனர், அதன் பின்னர், இவருடைய தந்தை ஒருபோதும் திரும்பவோ அல்லது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவோ இல்லை என்று அறியப்படுகிறது.[3] இவர் தனது பள்ளிப்படிப்பை செயின்ட் தாமஸ் பெங்களூரில் ஐந்தாம் வகுப்பு வரை முடித்தார், பின்னர், மங்களூரில் உள்ள நாராயண குரு பள்ளிக்கு மாறினார். இவர் தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியை முடித்தவுடன் பெங்களூர் திரும்பினார், அப்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.[4]

தொழில்

தொகு

அனுஸ்ரீ, மங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி சேனலான நம்ம டிவியில் டெலி அந்தியாக்ஷரி என்ற ஃபோன்-இன் மியூசிக் ஷோவில் தொகுப்பாளராக தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] இவர் ஈடிவி கன்னடத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டிமாண்டப்போ டிமாண்டுவில் தொகுப்பாளராக ஆனார், இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்தார். இவர் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் (கன்னடம்) 1 இல் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களை நிறைவு செய்தார். சுவர்ணா திரைப்பட விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், டிவி9 திரைப்பட விருதுகள், ஜீ மியூசிக் விருதுகள், சைமா விருதுகள், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போன்ற பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியதுடன், காமெடி கில்லாடிகள் மற்றும் இருபது இருபது நகைச்சுவைக் கோப்பை, குனியோனா பாரா மற்றும் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவர் பென்கிபட்னா [6] மூலம் திரைப்படத்துறையில் நுழைந்தார், இது இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான என்.ஏ.கே. (NAK) மீடியா சாதனை விருதை வென்றது. 2011 இல் முரளி மீட்ஸ் மீரா திரைப்படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார். இம்ரான் சர்தாரியா இயக்கிய உப்பு ஹுலி காரா படத்தில் அனுஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.[7] இப்போது கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

விருதுகள்

தொகு
  • 2011: கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் : சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) : முரளி மீட்ஸ் மீரா
  • 2015: ஜீ குடும்ப விருதுகள் விருதுகள் பிரபல தொகுப்பாளர்
  • 2015: NAK மீடியா சாதனை விருது - சிறந்த அறிமுக நடிகை : பென்கிபட்னா
  • 2016: ஜீ குடும்ப விருதுகள் 2016 - சிறந்த தொகுப்பாளர்
  • 2017: ஜீ குடும்ப விருதுகள் 2017 - பிரபல தொகுப்பாளர்
  • 2018: கெம்பேகவுடா பிரஷஸ்தி
  • 2018: ஜீ குடும்ப விருதுகள் 2018 - பிடித்த தொகுப்பாளர்
  • 2019: ஜீ குடும்ப விருதுகள் 2019 - பிடித்த தொகுப்பாளர்
  • 2020:ஜீ குடும்ப விருதுகள் 2020 - பிடித்த தொகுப்பாளர்
  • 2021:ஜீ குடும்ப விருதுகள் 2021 - பிடித்த தொகுப்பாளர்
  • 2022:ஜீ குடும்ப விருதுகள் 2022 - பிடித்த தொகுப்பாளர்

சான்றுகள்

தொகு
  1. "'My Focus is to Become a Good Actor, Not the Top Heroine'". Newindianexpress.com. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.
  2. "Mangaluru: Kannada anchor, actress Anushree to debut in Tulu film". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-05.
  3. Joy, Prathibha (12 September 2015). "'Can't bear the pain of rejection again'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 29 March 2017.
  4. "Bubbly girl of small screen to become Dream Girl of silver screen". Newskarnataka.com. 19 June 2013. Archived from the original on 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
  5. "Mangaluru: Kannada anchor, actress Anushree to debut in Tulu film". daijiworld.com. 22 March 2017. Archived from the original on 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 29 March 2017.
  6. "Anushree turns Heroine through 'Benki Patna'". Indiancinemagallery.com. 2013-11-29. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.
  7. "Imran Is Happy to Have 3 'Shrees' For Uppu Huli Kara". 2016-04-18 இம் மூலத்தில் இருந்து 2016-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160418204503/http://www.newindianexpress.com/entertainment/kannada/Imran-Is-Happy-to-Have-3-Shrees-For-Uppu-Huli-Kara/2016/04/18/article3385425.ece. பார்த்த நாள்: 2016-07-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஸ்ரீ_(கன்னட_நடிகை)&oldid=4114708" இலிருந்து மீள்விக்கப்பட்டது