பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்

பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் (CCL) இந்தியாவில் உள்ள 8 முக்கிய திரைப்படத்துறைகளில் இருந்து திரைப்பட நடிகர்கள் கொண்ட எட்டு அணிகள் போட்டியிடும் கிரிக்கெட் விளையாட்டு ஆகும். இந்த கழகம் 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
நாடு(கள்)இந்தியா
வடிவம்இருபது20
முதல் பதிப்பு2011 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
கடைசிப் பதிப்பு2013 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
அடுத்த பதிப்பு2014 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி
மொத்த அணிகள்தனியுரிமை 8
தற்போதைய வாகையாளர்கர்நாடக புல்டோசர்
அதிகமுறை வெற்றிகள்சென்னை ரைனோஸ் (2 2தடவை வெற்றி )
அதிகபட்ச ஓட்டங்கள்துருவ் சர்மா (கர்நாடகா) - 646
அதிகபட்ச வீழ்த்தல்கள்ரகு (தெலுங்கு) - 20
2013 பிரபலங்கள் கிரிக்கெட் கழகம்
வலைத்தளம்official website

வரலாறு தொகு

அமைத்தல் தொகு

விஷ்ணு வர்தன் இந்துரியால் 2011ம் ஆண்டு 4 அணிகளை கொண்டு அமைக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் இரண்டு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டன.

முதல் சீசன் தொகு

2011ம் ஆண்டு 4 அணிகள் போட்டியிட்டன (சென்னை ரைனோஸ், கர்நாடக புல்டோசர், தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ்) இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.

இரண்டாவது சீசன் தொகு

இரண்டாவது சீசன் 2012 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி ஜனவரி முதல் 13 ஆம் திகதி பிப்ரவரி வரை நடத்தப்பட்டது. இந்த விளயாட்டு அமைப்பில் இரண்டு கூடுதல் அணிகள் (கேரள ஸ்ட்ரைக்கர் மற்றும் பெங்காள் டைகர்ஸ்) சேர்க்கப்பட்டது. இந்தி திரைப்பட குழு "மும்பை ஹீரோஸ்" க்கு தலைவராக ஷார்ஜா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது விளயாட்டு அமைப்பில் சென்னை ரைனோஸ் இரண்டாவது முறையாக கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து சாம்பியன்ஸ் வெற்றி பெற்றது. இது சென்னை ரைனோஸ்க்கு 2வது வெற்றி ஆகும்.

மூன்றாவது சீசன் தொகு

மூன்றாவது விளயாட்டு அமைப்பில் மேலும் இரண்டு கூடுதல் அணிகள் (போஜ்புரி திரைப்படத்துறையும் மராத்தி திரைப்படத்துறையும்) சேர்க்கப்பட்டது. மூன்றாவது விளயாட்டு அமைப்பு தொடக்க நிகழ்ச்சி 19 ஆம் திகதி ஜனவரி 2013 ஆம் ஆண்டு மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அணிகள் மற்றும் செயல்திறன் தொகு

அணிகள் தொகு

அணி தொழில்துறை மாநிலம் அணித்தலைவர் அணி உரிமையாளர்
கேரள ஸ்ட்ரைக்கர் மலையாளத் திரைப்படத்துறை கேரளம் மோகன்லால் லிஸ்சி ப்ரியதர்ஷன்
சென்னை ரைனோஸ் தமிழகத் திரைப்படத்துறை தமிழ்நாடு விஷால் கே.கங்கா பிரசாத்
தெலுங்கு வாரியர்ஸ் ஆந்திரத் திரைப்படத்துறை ஆந்திரப் பிரதேசம் வெங்கடேஷ் மகேஷ் ரெட்டி
மும்பை ஹீரோஸ் பாலிவுட் மகாராட்டிரம் சுனில் ஷெட்டி சோஹைல் கான்
கர்நாடக புல்டோசர் கர்நாடக சினிமா கருநாடகம் சுதீப் அசோக் Kheny
பெங்காள் டைகர்ஸ் மேற்கு வங்காளம் சினிமா மேற்கு வங்காளம் ஜீத் போனி கபூர்
போஜ்புரி டப்பைங்க்ஸ் போஜ்புரி திரைப்படத்துறை பீகார் மனோஜ் திவாரி பிரதீக் கணக்கிய
மராத்தி வீர் மராத்தி திரைப்படத்துறை மகாராட்டிரம் ரித்தேஷ் தேஷ்முக் ரித்தேஷ் தேஷ்முக்

செயல்திறன் தொகு

அணி 2011 2012 2013
பெங்காள் டைகர்ஸ் இல்லை GS GS
போஜ்புரி டப்பைங்க்ஸ் இல்லை இல்லை GS
சென்னை ரைனோஸ் W W GS
கர்நாடக புல்டோசர் R R W
கேரள ஸ்ட்ரைக்கர் இல்லை GS SF
மும்பை ஹீரோஸ் GS SF GS
தெலுங்கு வாரியர்ஸ் GS SF R
மராத்தி வீர் இல்லை இல்லை SF

அறிக்கை:

  • W = வெற்றி; R = ஓடுபவர் ; SF = அரையிறுதி; GS = குழு நிலவரம்; N/a =விளையாடவில்லை

விளையாடிய இடங்கள் தொகு

CCL 2011 தொகு

2011ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் சூர்யா மற்றும் துணை தலைவர் நடிகர் அப்பாஸ் ஆகும். CCL 2011 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை வென்றது.

சி.சி.எல் 2011 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்

CCL 2012 தொகு

2012ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2012 இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் 2வது முறையாகவும் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை 2வது முறையாக வென்றது.


சி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்

CCL 2013 தொகு

2013ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். CCL 2013ம் ஆண்டு 8 அணிகளை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு A சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்ட்ரைக்கர் மற்றும் மராத்தி வீர் குழு B கர்நாடக புல்டோசர், மும்பை ஹீரோஸ்,பெங்காள் டைகர்ஸ் மற்றும் போஜ்புரி டப்பைங்க்ஸ் ஆகும்.

CCL 2013 இறுதி சுற்றில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் கர்நாடகா புல்டோசர் தெலுங்கு வாரியர்ஸ்சை தோற்கடித்து CCL 2013ம் ஆண்டு சாம்பியனை கர்நாடகா புல்டோசர் வென்றது.

CCL 2014 தொகு

2014ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும்.

CCL 2014ம் ஆண்டு சென்னை அணி தூதுவராக நடிகை திரிஷா மற்றும் அணி விளம்ம்பர தூதுவராக நடிகை சஞ்சிதா ஆகும். 2014ம் ஆண்டு CCL சச்சின டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

வெளி இணைப்புகள் தொகு