அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம்

இந்திய விளையாட்டு நிறுவனம்

அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம் (All Tripura Chess Association) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள சதுரங்க விளையாட்டின் உச்ச அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்புடன் இச்சங்கம் இணைக்கப்பட்டுள்ளது. [1]

அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம்
All Tripura Chess Association
சுருக்கம்அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம்
உருவாக்கம்1975
வகைதிரிபுராவில் உள்ள சதுரங்க நிர்வாகக் குழு
சட்ட நிலைசங்கம்
நோக்கம்சதுரங்கம்
சேவை பகுதி
திரிபுரா
உறுப்பினர்கள்
இணைக்கப்பட்ட அலகுகள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
சார்புகள்அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு

வரலாறு

தொகு

அனைத்து திரிபுரா சதுரங்க சங்கம் 1974 ஆம் ஆண்டில் திரிபுராவில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பின்வரும் நபர்கள் இச்சங்கத்தின் நிர்வாகப் பிரதிநிதிகளாக இருந்தனர் : பிரணாப் குமார் கோசு (தலைவர்), காந்தி குமார் சக்ரவர்த்தி (செயலாளர்), சுதிர் தாசுகுப்தா (பொருளாளர்).[1] என்ற பொறுப்புகளை வகித்தனர்.

திரிபுரா சதுரங்க சங்கம் தேசிய மற்றும் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகளை நடத்துகிறது. 1982 ஆம் ஆண்டில் தேசிய பி வகை வெற்றியாளர் போட்டிகள் 1983 ஆம் ஆண்டில் தேசிய ஏ வகை வெற்றியாளர் போட்டிகள் மற்றும் 1986 ஆம் ஆண்டில் 5 ஆவது வடகிழக்கு சதுரங்க வெற்றியாளர் போட்டிகள் ஆகியவற்றை நடத்த இச்சங்கம் ஏற்பாடு செய்தது [1]

2017 ஆம் ஆண்டில் திரிபுராவின் சதுரங்க வீரர்களால் மாநிலம் முழுவதும் சதுரங்க விளையாட்டை வளர்க்க திரிபுரா சதுரங்க மன்றங்கள் உருவாக்கப்பட்டன. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Tripura Chess History". Official Website of ATCA. Archived from the original on 19 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. TRIPURA CHESS CLUB constituted on Tuesday, held press meet with monthly competition along with 11 activities, Tripuraindia.in, 24 October 2017

புற இணைப்புகள்

தொகு