அன்சார் ஏரி

அன்சார் ஏரி (Anchar Lake) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் சிறிநகர் நகரத்தின் சவுரா பகுதியில் மோசமான நிலையிலுள்ள ஓர் ஏரியாகும்.[1]. கேந்தெர்பால் நகரத்திற்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. தால் ஏரியை தால் கதவு நாகின் ஏரியுடன் இணைத்துள்ளதைப் போல மிகவும் பிரசித்தி பெற்ற தால் ஏரியுடன் "அமிர் கான் நல்லா" என்ற கால்வாய் வழியாக அன்சார் ஏரி இணைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது அதிகப்படியான உபரி தண்ணீரை திசைத்திருப்ப ஏதுவாக இந்த இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[2].

ஒரு காலத்தில் வேட்டைப்படகு, உயிர்காப்புப் படகு போன்ற படகுகளில் தால் ஏரிக்கு பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ஏரி பெரிதும் பயன்பட்டது. காலப்போக்கில் மாசுபாடு, பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு, சுற்றுப்புறங்களில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் போன்ற காரணங்களால் ஏரி மோசமடைந்துள்ளது [3]. 1990 ஆம் ஆண்டுகளில் தால் ஏரியின் மேற்குப் பகுதியைச் சுற்றி மியர்ப்ளான் நெடுஞ்சாலையைக் கட்டுவதற்காக நல்லா மார் மூடப்பட்டபோது புதிய சாலையின் கீழ் ஆறு அடி குழாய்கள் பதியவைக்கப்பட்டன. தால் ஏரியின் தண்ணீர் தொடர்ந்து அஞ்சர் ஏரி அமைப்பிற்குள் செல்ல இது அனுமதித்தது. இருப்பினும் குழாய்கள் குப்பைகள், இலைகள் போன்ற கழிவுப்பொருள்களால் அடைபட்டன [4].

தால், ஊலர் ஏரிகளைப்போல இந்த ஏரியும் அன்சார் எனப்படும் அன்சி சமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தது[5]

மேற்கோள்கள் தொகு

  1. "ANCHAR LAKE: On Death Bed". www.greaterkashmir.com (ஆங்கிலம்). 2012-10-19. Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
  2. Floods in Kashmir, Army called out -Sep 4, 2006, 01:09 AM IST
  3. "Anchar Lake near Srinagar on the verge of extinction". Newstrack India. 10 Apr 2010. http://www.newstrackindia.com/newsdetails/158206. பார்த்த நாள்: 22 Feb 2013. 
  4. "To save a lake: The Jammu and Kashmir Government has launched an ambitious effort to save the Dal lake in Srinagar.". 15. Frontline. 23 May – 5 Jun 1998. http://www.hindu.com/fline/fl1511/15110660.htm. பார்த்த நாள்: 22 Feb 2013. 
  5. Puri, Luv (15 May 2005). "Communities: A lake endangered". The Hindu. http://www.thehindu.com/thehindu/mag/2005/05/15/stories/2005051500310400.htm. பார்த்த நாள்: 7 March 2018. 


வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சார்_ஏரி&oldid=3586025" இலிருந்து மீள்விக்கப்பட்டது