அன்சுலா காந்த்

அன்சுலா காந்த் (Anshula Kant) (பிறப்பு: செப்டம்பர் 7, 1960) உலக வங்கி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனருமாகவும் 12 சூலை 2019 அன்று நியமிக்கப்பட்டார். [1] [2] [3] இவர் இந்தியாவின் ரூர்க்கியைச் சேர்ந்தவர் .

அன்சுலா காந்த்
உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 அக்டோபர் 2019
குடியரசுத் தலைவர்டேவிட் மால்பாஸ்
முன்னையவர்கிரிஸ்டியானா ஜியார்ஜியாவா (தலைமை நிர்வாகி )
பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை செயல் அலுவலர்
பதவியில்
7 செப்டம்பர் 2018 – 31 ஆகத்து 2019
முன்னையவர்பி. சிறீராம்
பின்னவர்சிறீ குப்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 7, 1960 (1960-09-07) (அகவை 64)
ரூர்க்கி, இந்தியா
தேசியம்இந்தியர்
வேலைவங்கியாளர்

கல்வி

தொகு

1979 ஆம் ஆண்டில் புது தில்லி, லேடி சிறீ ராம் மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1981 ஆம் ஆண்டில், இவர் பொருளியியல் பள்ளியிலிருந்து பொருளாதாரத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். <[1] வங்கியாளர் நிறுவனத்தில் இவர் சானறளிக்கப்பட்ட கூட்டாளர் ஆனார்.[4]

தொழில்

தொகு

1983 ஆம் ஆண்டில், இவர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு அதிகாரியாக சேர்ந்தார். இவர் வங்கியின் மகாராட்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் தலைமை பொது மேலாளராகவும், தேசிய வங்கி குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநராகவும், வங்கியின் சிங்கப்பூர் கிளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார். [4] செப்டம்பர் 2018 இல், இவர் இரண்டு வருட காலத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், வாரிய உறுப்பினராகவும் ஆனார். [1][5][6]

2019 12 சூலை அன்று, இவர் உலக வங்கி குழுவின் தலைமை நிதி அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் இருப்புநிலை மற்றும் நிதி மற்றும் இடர் மேலாண்மைக்கு பொறுப்பாக இருந்தார்.[7]

சொந்த வாழ்க்கை

தொகு

காந்த் உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த பட்டய கணக்காளர் சஞ்சய் காந்தை மணந்தார். இவருக்கு சித்தார்த் என்ற மகனும், நுபூர் எனறா ஒரு மகளும் உள்ளனர். [1][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Explained: Anshula Kant's journey from SBI to World Bank". The Indian Express (in Indian English). 13 July 2019. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  2. "SBI MD Anshula Kant appointed World Bank CFO and MD". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  3. Kumar, Sanjay (13 July 2019). "World Bank appoints Anshula Kant as MD, CFO". BFSI (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  4. 4.0 4.1 "Who is Anshula Kant, the new State Bank of India (SBI) MD?". Zee Business (in ஆங்கிலம்). 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  5. "Anshula Kant appointed new SBI MD; to serve till September 2020". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  6. "Anshula Kant appointed SBI Managing Director: Here's her journey from Probationary Officer to MD". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 7 September 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  7. "Who is Anshula Kant — Indian banker appointed as MD and CFO of World Bank". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
  8. "Fond of malai pua, World Bank's new CFO Anshula Kant has a strong Varanasi connection". Hindustan Times (in ஆங்கிலம்). 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 15 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சுலா_காந்த்&oldid=3108226" இலிருந்து மீள்விக்கப்பட்டது