அன்சூ ஏரி

பாகித்தானிலுள்ள ஒரு ஏரி

அன்சூ ஏரி (Ansoo Lake) ("கண்ணீர் வடிவ ஏரி"), என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மன்சேரா மாவட்டத்தில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கண்ணீர் வடிவ ஏரியாகும்.[1] இது, கடல் மட்டத்திற்கு மேல் 4,245 மீட்டர்கள் (13,927 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், இமயமலைத் தொடரின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ககன் பள்ளத்தாக்கின் மிக உயரமான மலையான மாலிகா பர்பத்த்திற்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது.[2] கண்ணீர்த் துளி போன்று இருப்பதால் ஏரிக்கு இப்பெயர் வந்தது. அன்சூ என்ற உருது வார்த்தைக்கு "கண்ணீர் துளி" என்று பொருள். இந்த ஏரி 1993 ஆம் ஆண்டு பாக்கித்தான் விமானப்படையின் விமானிகளால் இந்தப் பகுதியில் குறைந்த உயரத்தில் பறந்த போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[3]

அன்சூ ஏரி
உருகிய நிலையில் ஏரி
பக்கித்தானில் ஏரியின் அமைவிடம்
பக்கித்தானில் ஏரியின் அமைவிடம்
அன்சூ ஏரி
அமைவிடம்ககன், மனூர் சமவெளி, இமயமலை
ஆள்கூறுகள்34°48′49.98″N 73°40′35.94″E / 34.8138833°N 73.6766500°E / 34.8138833; 73.6766500
பூர்வீக பெயர்أنسوجھیل (உருது)
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,250 மீட்டர்கள் (13,940 அடி)

இதனையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Ansoo Lake - A tear-shaped lake in Pakistan". kgda.gkp.pk. Kaghan Development Authority. Archived from the original on 13 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 October 2019.
  2. "Ansoo Lake | Pakistan Tourism Portal". paktourismportal.com. Archived from the original on 23 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Ansoo Lake discovered in 1993". kptourism.com. TCKP. பார்க்கப்பட்ட நாள் 13 October 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அன்சூ ஏரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சூ_ஏரி&oldid=4110775" இலிருந்து மீள்விக்கப்பட்டது