அன்னபூரணி சுப்ரமணியம்
அன்னபூரணி சுப்ரமணியம் , (Annapurni Subramaniam) பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியலாளர் ஆவார். இவர் விண்மீன் கொத்துகள், விண்மீன் படிமலர்ச்சி, பால்வெளி விண்மீன்தொகை, மெகல்லான் முகில்கள் பற்றி ஆய்வு செய்துவருகின்றார்.[1][2]
அன்னபூரணி சுப்ரமணியம் | |
---|---|
பிறப்பு | பாலக்காடு |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | இந்திய வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி |
ஆய்வு நெறியாளர் | பேரா. இராம்சாகர் |
பிள்ளைகள் | 2 |
கல்வி
தொகுஅன்னபூரணி பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் அறிவியலில் பள்ளிக்கல்வியை முடித்தார்.[1] இவர் தன் முனைவர் பட்டத்தினை 1996 ஆம் ஆண்டில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் விண்மீன் கொத்துகள் ஆய்விலும், விண்மீன் உருவாகும் விதம் பற்றிய ஆய்விலும் பெற்றுள்ளார்.[2][3]
வாழ்க்கைப் பணி
தொகுஇவர் 1990-96 கால இடைவெளியில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்தார்.பிறகு 1998இல் அந்நிறுவனத்திலேயே முதுமுனைவர் பட்ட ஆய்வாளரானார். இப்போது இவர் அங்கு அறிவியலாளராகப் பணிபுரிகிறார்.[2] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தில் முனைவாகச் செயல்படும் உறுப்பினராக உள்ளார். [4]
ஆய்வுப் புலங்கள்
தொகுஅன்னபூரணியின் ஆய்வுப் புலங்களாவன:
- விண்மீன் கொத்துகள் (திறந்தநிலை, விண்கோளக வகைகள்)
- விண்மீன் உருவாக்கமும் முந்து-MS விண்மீன்களும்
- செவ்வியல் Beவகை & ஃஎர்பிக் Ae/Beவகை விண்மீன்கள்
- நட்சத்திர மண்டலங்களின் கட்டமைப்பு
- மெகல்லான் முகில்கள்
- விண்மீன் தொகை [2]
இவரது வெளியீடுகள் விண்வெளியியல் தரவுத்தளம் எனும் இணையத்தளத்தில் உள்ளன.
நடப்புத் திட்டங்கள்
தொகுஇந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பின்வரும் நடப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
- விண்மீன்கொத்துகளில் உள்ள விண்மீன்களின் உமிழ்வரிகள்
- இளம் விண்மீன்கொத்துகளின் உருவாக்க வரலாறு
- முந்து திறந்தநிலைக் கொத்துவகைகள் -முந்து விண்பொருள் வட்டுகளின் ஆழ்நிலை ஆய்வு
- ஆய்வு செய்யப்படாத திறந்தநிலைக் கொத்துகளின் துல்லியமான ஒளிர்வளவியல்
- சிறிய மெகல்லான் முகிலின் ஒளிர்வட்டம் (Halo)
- பெரிய மெகல்லான் முகிலின் விண்மீன்தொகை
- புறவரம்பு அளக்கை: மெகல்லான் முகில்கள் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Women in Science - Annapurni S" (PDF). பார்க்கப்பட்ட நாள் March 22, 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Profile - IIA Annapurni S". பார்க்கப்பட்ட நாள் March 22, 2014.
- ↑ "Annapurni Subramaniam". Sheisanastronomer.org. பார்க்கப்பட்ட நாள் 2014-03-24.
- ↑ "Annapurni Subramaniam". IAU. 2013-01-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-24.