அன்னா பிகரன்சுமேயர்
அன்னா கேதரின் "கே" பேரன்சுமேயர் (ஆங்கில மொழி: Anna Katherine "Kay" Behrensmeyer) ஓர் அமெரிக்கத் தொல்லுயிரியலாளரும் புதைபடிவ இயலாளரும் ஆவார். புவிச்சூழல் தொல்லுயிர்ப்படிவுகள் பற்றிய ஆய்வில் முன்னோடியான இவர் கிழக்கு ஆப்பிரிக்காவில் மாந்தரினம் தோன்றிய சூழலில் நிலவிய புவியியல், தொல்லுயிரியல் புலங்களின் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இவர் சுமித்சோனிய நிறுவனத்தின் தொல்லியல் துறைசார்ந்த இயற்கை வரலாற்றுத் தேசிய அருங்காட்சியகப் பொறுப்பாளரும், மாந்தரினத் தோற்றத் திட்டத்தின் துணை ஆய்வாளரும், புவிச்சூழல் படிமலர்ச்சி திட்டத்தின் இணை இயக்குநரும் ஆவார்.[1]
அன்னா கே பேரன்சுமேயர் | |
---|---|
துறை | புதைபடிவ இயல், தொல்லுயிரியல் |
பணியிடங்கள் | இயற்கை வரலாற்றுத் தேசிய அருங்காட்சியகம் |
கல்வி கற்ற இடங்கள் | புனித உலூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | கென்யாவில் உருடோல்ஃப் ஏரியின் கிழக்கே அமைந்த இடைநிலைப் புத்துயிரி முதுகெலும்பிகளின் தொகுப்புசார் தொல்லுயிரியல், புதைபடிவ இயல் (1973) |
ஆய்வு நெறியாளர் | பிறையன் பேட்டர்சன் |
துணைவர் | வில்லியம் கெய்சர் |
பிள்ளைகள் | இருவர் |
இவர் 2002 ஆம் ஆண்டின் கண்டுபிடிப்பு (Discover) இதழில் "50 மிகவும் முதன்மையான பெண் அறிவியலாளர்"களில் ஓருவராகக் குறிப்பிடப்பட்டவர் ஆவார்.[2]
கல்வி
தொகுபேரன்சுமேயர் தன் கலை இளவல் பட்டத்தைப் புனித உலூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[3]
பணி
தொகுஇவர் 1968 ஆம் ஆண்டில், கென்யாவில் தர்கானா ஏரிக்கருகிலுள்ள உலோதகம் எனுமிடத்தில், பிந்தைய தொடக்கநிலைப் புத்துயிரிக் காலத்துக்கும் முதனிலை இடையுயிரிக் காலத்துக்கும் இடைப்பட்ட தொல்லுயிரியல் உருவாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். இந்த உருவாக்கத் தொடரில் ஆறு பாறையடுக்கு அலகுகளை இனங்கண்டார். இவர் 1967 இல் திரட்டிய 400 க்கும் மேற்பட்ட தொல்லுயிரிப் படிவுகளைப் பின்னர் அட்டவணைப்படுத்தியுள்ளார். மேலும் உலோதகம்-3 க்கான விலங்குப் பட்டியலையும் 1976 இல் வெளியிட்டுள்ளார்.[4]
வெளியீடுகள்
தொகுபேரன்சுமேயர் தனித்தும் பிறரோடு இணைந்தும் 130 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anna K. ("Kay") Behrensmeyer". Human Origins Program. National Museum of National History. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
- ↑ "Research Newsroom". National Museum of Natural History. Archived from the original on 3 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Anna K. Behrensmeyer". National Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 October 2013.
- ↑ Leakey, Meave G.; Harris, John M., ed. (2003). Lothagam: The Dawn of Humanity in Eastern Africa. New York: Columbia University Press. pp. 3–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50760-8.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)