அன்பிற்கினியாள்
அன்பிற்கினியாள் (Anbirkiniyal) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் தப்பிப் பிழைத்தல் பரபரப்பூட்டும் படமாகும். கோகுல் இயக்கிய இப்படத்தை அருண் மற்றும் அலங்கார பாண்டியன் தயாரித்தனர். இது மலையாளத் திரைப்படமான ஹெலன் (2019) படத்தின் மறுஆக்கம் ஆகும். இதில் அருணின் மகள் கீர்த்தி தற்செயலாக ஒரு உறைவிப்பான் அறையில் மாட்டிக்கொண்டு உயிர்த்தப்ப போராடும் பெண்ணாக நடித்தார். படத்தின் தயாரிப்புப் பணிகள் 2020 பெப்ரவரியில் தொடங்கியது. மேலும் நேர்மறையான விமர்சனங்களுடன் 2021 மார்ச் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது.
அன்பிற்கினியாள் | |
---|---|
திரையரங்கச் சுவரொட்டி | |
இயக்கம் | கோகுல் |
தயாரிப்பு | அருண் பாண்டியன் அங்கார் பாண்டியன் |
இசை | ஜாவித் ரியாஸ் |
நடிப்பு | அருண் பாண்டியன் கீர்த்தி பாண்டியன் பிரவீன் ராஜா |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
படத்தொகுப்பு | பிரதீப் இ. இராகவ் |
கலையகம் | ஏ அன்ட் பி குழுமங்கள் |
விநியோகம் | சக்தி பிலிம் பேக்டரி[1] |
வெளியீடு | 5 மார்ச்சு 2021 |
ஓட்டம் | 124 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுஅன்பு என்று அழைக்கப்படும் அன்பிற்கினியாள் சிவம் இளம் அறிவியல் செவிலியர் பட்டதாரி. அன்பு தன் தந்தை சிவசாமியின் கடன்களை அடைக்கும் நோக்கம் கொண்டுள்ளாள். அதற்காக கனடாவில் வேலைக்கு செல்வதற்காக ஐஈஎல்டிஎஸ் பயிற்சிபெற்று வருகிறாள். மேலும் அவள் ஒரு பேரங்காடியில் செயல்படும் வறுகோழி துரித உணவகமான தி சிக்கன் ஹப்பில் பகுதிநேரமாக வேலை செய்கிறாள். ஒரு இரவு, அன்புவின் காதலன் சார்லஸ் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் தலைகவசம் அணியாததற்காகவும் காவலர்களால் மறிக்கப்படுகின்றனர். இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். சிவம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார். அங்கு தன் மகளைப் பார்த்து வெறுப்படைகிறார். அதன்பின் அவள் உரையாட முயன்றபோதும் அவளுடன் பேசவில்லை.
ஒரு இரவு, அன்பு தன்னை பணியிடத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆளில்லாமல் இருக்கிறாள். அவள் சிவத்தை அழைக்க முயற்சிக்கிறாள், ஆனால் அவர் இன்னும் அவளிடம் கோபமாக இருக்கிறார். உணவக மேலாளர் பணியாளர்களை புதியதாக வந்த சில பெட்டிகளை உறைவிப்பான் அறையில் வைக்கும்படி சொல்கிறார். அவர்கள் அவசரமாக செல்லும் நோக்கத்தில் அன்புவை உள்ளே வைக்கச் சொல்லுகின்றனர். இரவு கடையை அடைக்கும் போது, மேலாளர் தெரியாமல் அன்புவை குளிர்விப்பான் அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுகிறார். அங்கு வெப்பநிலை -18 ° செ. அன்புவின் இந்த இக்கட்டான நிலையை அறியாத சார்லசும், சிவமும் அவளைத் தேடுகிறார்கள். அதே நேரம் உறைவிப்பான் அறையில் உறைபனியால் இறக்காமலிருக்க அன்பு போராடுகிறாள். வணிக வளாகத்தின் முன்புறம் உள்ள பாதுகாவலர் காவலர்களிடம் அன்பு பேரங்காடியை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறுகிறார். அவர்கள் உள்ளே புகுந்து அவளைத் தேட ஆரம்பிக்கின்றனர். இறுதியாக உறைவிப்பான் அறையில் அவள் உயிருடன் இருப்பதைக் கண்கின்றனர். அன்பு உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். சிவம் பாதுகாவலருகு நன்றி சொல்ல வரும்போது, அவள் வெளியில் செல்ல வில்லை என்று எப்படி தெரியும் என்று கேட்கும்போது. அன்பு தன்னை எப்போதும் பார்த்து புன்னகை செய்துவிட்டுதான் செல்வாள் என்று கூறுகிறார்.
நடிப்பு
தொகு- அருண் பாண்டியன் -சிவமாக
- கீர்த்தி பாண்டியன் -அன்பிற்கினியாள் சிவம் (அன்பு)
- திரியா இளம் அன்பிற்கினியாள் சிவம்
- பிரவீன் ராஜா சார்லஸ் செபாஸ்டியனாக
- கோகுல் கைதியாக [3]
- பூபதி ராஜா தி சிக்கன் ஹப்பின் மேலாளராக [3]
- ரவீந்திரா விஜய் -ரவீந்திரனாக
- ஜெயராஜ் கோழிக்கோடு -பேரங்காடியின் பாதுகாவலராக
- ஆதிநாடு சசி தலைமை காவலராக [3]
தயாரிப்பு
தொகு2020 சனவரியில், அருண் பாண்டியன் தனது மகள் கீர்த்தி நடிப்பில் மலையாளப் படமான ஹெலன் (2019) படத்தை மறுஆக்கம் செய்வதாகத் தெரிவிதார். இது கீர்த்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த படமாகும்.[4] இது தும்பா (2019) படத்திற்கு பிறகு கீர்த்தி நடித்த இரண்டாவது படம் ஆகும்.[5] இதை கோகுல் இயக்கியுள்ளார். இப்படத்தை ஏ அன்ட் பி குழுமங்களின் கீழ் அருணின் மற்றொரு மகள் கவிதாவும் இணைந்து தயாரித்தார்.[6] இது இயக்குனராக கோகுலின் ஐந்தாவது படம்.[3] படத்தின் ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமியால் செய்யப்பட, பிரதீப் இ ராகவ் படத் தொகுப்பை மேற்கொண்டார். படத்தின் முதன்மை ஒளிப்பதிவு 2020 பிப்ரவரியில் தொடங்கியது.[7] படத்தின் படப்பிடிப்பு 2020 ஆகத்தில் முடிவடையும் தருவாயை எட்டியது.[8] 2021 பிப்ரவரிக்குள் படப்பிடிப்பு முடிவடைந்தது, அன்பிற்கினியாள் என்ற தலைப்பு பிப்ரவரி 15 அன்று அறிவிக்கப்பட்டது.[9]
இசை
தொகுஇப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்தார்.[10]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் லலிதானந்த்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "உன் கூடவே" | பிராத்தனா இந்திரஜித் | 2:28 | |
2. | "சஞ்சாரம்" | சித் சிறீராம் | 3:52 | |
3. | "ஆனகட்டி" | சிறீராம் பார்த்தசாரதி | 4:03 | |
4. | "தெய்வங்கள்" | சத்தியபிரகாஷ் | 3:08 | |
5. | "அன்றாடம்" | பிரார்த்தனா இந்திரஜித் | 2:28 |
வெளியீடு
தொகுஅன்பிற்கினியள் படமானது 27 பிப்ரவரி 2021 அன்று சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு காட்டப்பட்டது.[11] படம் 2021 மார்ச் 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[12] இது 2021 ஏப்ரல் 4 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sakthi Film Factory [SakthiFilmFctry] (23 February 2021). "We are extremely elated to bag Tamil Nadu Theatrical rights of #Anbirkiniyal. A beautiful tale about power of a woman A @SakthiFilmFctry @sakthivelan_b Release" (Tweet).
- ↑ Mannath, Malini (5 March 2021). "Review- Anbirkiniyal". Malini Mannath. Archived from the original on 29 March 2021. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
- ↑ 3.0 3.1 3.2 3.3 நாகப்பன், க. (2 March 2021). "முதல் பார்வை: அன்பிற்கினியாள்". இந்து தமிழ் திசை. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ "Arun Pandian to remake this blockbuster for his daughter". Thandora Times. 27 January 2020. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Keerthi Pandian signs her second film in Tamil". 8 February 2020 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210404125047/https://www.dtnext.in/News/Cinema/2020/02/08001612/1213875/Keerthi-Pandian-signs-her-second-film-in-Tamil.vpf.
- ↑ "Arun Pandian to make a comeback with Helen remake". சினிமா எக்ஸ்பிரஸ். 7 February 2020. Archived from the original on 26 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Malayalam film 'Helen' gets a Tamil remake!". Sify. 7 February 2020. Archived from the original on 9 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Keerthi Pandian & Arun Pandian's Tamil remake of Helen nearing completion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 August 2020. Archived from the original on 14 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Helen Tamil remake titled Anbirkiniyal". 15 February 2021. https://www.cinemaexpress.com/stories/news/2021/feb/15/helen-tamil-remake-tiled-anbirkiniyal-22841.html.
- ↑ "Anbirkiniyal". Gaana.com. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "என் மகளுக்கு கொடுத்த பரிசு – Arun Pandian நெகிழ்ச்சி..!". Kalakkal Cinema. 28 February 2021. Archived from the original on 28 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Keerthi Pandian's Anbirkiniyal gets U certificate; all set to release on THIS date". Zoom. 25 February 2021. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "New on Amazon Prime this week: 'Manifest', 'Anbirkiniyal' and more". https://www.thehindu.com/entertainment/movies/new-on-amazon-prime-this-week-manifest-anbirkiniyal-and-more/article34198464.ece.