அபர்னா போப்பட்

இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்

அபர்னா போப்பட் (Aparna Popat) 1978 ஜனவரி 18 அன்று பிறந்த ஒரு முன்னாள் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். 1997 மற்றும் 2006 க்கு இடையில் அனைத்து தேசிய போட்டிகளிலும் விளையாடி வென்றபோது, இவரது சாதனையானது ஒன்பதாவது இடத்தை அடைந்தது.[2]

Aparna Popat
Popat smiling at the camera in a white sweatshirt
2005 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது வாங்கும் புகைப்படம்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்அபர்னா லால்ஜி போப்பட்
நாடுஇந்தியா
பிறப்பு18 சனவரி 1978 (1978-01-18) (அகவை 46)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம்1.63 மீ (5 அடி 4 அங்)
விளையாடிய ஆண்டுகள்1989–2006
கரம்வலது கை ஆட்டக்காரர்
Women's singles
பெரும தரவரிசையிடம்16[1]
இ. உ. கூ. சுயவிவரம்

ஆரம்ப வாழ்க்கை தொகு

அபர்ணா போப்பட் 1978 ஜனவரி 18இல் மகாராஷ்டிராவின் மும்பையில் குஜராத்தியான லால்ஜி போப்பட் மற்றும் ஹீனா போப்பட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அவர் மும்பையிலுள்ள ஜே. பி. பெட்டிட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், பெங்களூர் மவுண்ட் கார்மெல் கல்லூரியில் பயின்றார் , மும்பை பல்கலைக் கழகத்தில் அபர்ணா வர்த்தக துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பயிற்சி பின்னணி தொகு

1986 ஆம் ஆண்டில் மும்பையிலிருந்து அபர்ணா இறகுப்பந்தாட்டத்தைத் தொடங்கினார். அவரது 8 வயதில் அனில் பிராதனிடம் பயிற்சிக்கு சென்றபோது இவரிடமிருந்த தீப்பொறியைக் கண்டார். அவளுடைய பெற்றோரிடம் "இந்த பெண்ணை என்னிடம் தாருங்கள், நான் அவரை இந்திய இறகுப்பந்தாட்டத்தின் வரைபடத்தில் ஏற்றுவேன்" என்றார். ஒரு தேசிய போட்டியாளராக மாற வேண்டுமென்ற காரணத்தால், விளையாட்டின் பல சவால்களை எதிர்கொள்ள தேவையான திறமைகளை அவர் உருவாக்கினார்.[3] 1994 ஆம் ஆண்டில், தனது திறமைகளை விரிவாக்குவதற்காக பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பிரகாஷ் பதுகோனே இறகுப்பந்தாட்ட பயிற்சி நிலையத்திற்கு அவர் மாறினார். அவர் தனது உடற்பயிற்சி மற்றும் கற்றல் நுட்பங்களை சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் பங்கு கொள்வதற்கு ஏற்றவாறு தன்னை கட்டியெழுப்பினார். மேலும், தனது கற்றலை விரிவுபடுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள கெங்கேரி நகரின் விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு அவர் மாறினார், அங்கு பயிற்சியாளர் கங்குல பிரசாத்திடம் பயிற்சி பெற்றார். [4]

தொழில் சிறப்பம்சங்கள் தொகு

1997 ல் ஹைதராபாத்தில் தனது முதல் மூத்த தேசிய பட்டத்தை அபர்னா கைப்பற்றினார். 2006 வரை அவர் மூத்த தேசிய பட்டத்தை வென்றார், அதன்மூலம் ஒன்பது தொடர்ச்சியான தேசிய ஒற்றையர் பட்டங்களை வென்ற பிரகாஷ் படுகோனின் சாதனையை சமன் செய்தார். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் 15 வயதான சாய்னா நேவலை தோற்கடித்த பின்னர், 27 வயதில் அவர் கடைசியாக ஒன்பது மூத்த தேசிய பட்டத்தை வென்றார்.[5] சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 2 ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஒரு ஆசிய விளையாட்டு, 1996 ல் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் மற்றும் 3 காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்கள் இவர் வென்றுள்ளார். உலக அளவில் 16 வது தரத்தை அடைந்தார்.

ஓய்வு தொகு

17 வருட தொழில்முறை இறகுப்பந்தாட்ட போட்டிகளுக்கு பிறகு, 2006 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார், மணிக்கட்டு காயத்தால் பாதிக்கப்பட்ட இவர் தேசிய போட்டியில் தோல்வி அடைந்தார். தற்போது அவர் மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

பயிற்சியாளர் தொகு

இந்திய இறகுப்பந்தாட்ட தொடரில் மும்பை மாஸ்டர்ஸ் சங்கத்தின் பயிற்சிப் பொறுப்பை அபர்ணா போப்பட் எடுத்துக் கொண்டார்.[6]

விருதுகள் மற்றும் சாதனைகள் தொகு

அவர் 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை பெற்றார். மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டனால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு முயற்சியான உலகளாவிய விளையாட்டு வழிகாட்டல் திட்டத்திற்காக உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பங்கேற்பாளர்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்தியர் ஆவார், இந்த மதிப்புமிக்க திட்டம் பெண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த நேரத்தில், தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி மூத்த தேசிய போட்டிகளில் விளையாடி வென்று அவரது 9 வது தொடர் வெற்றியை பெற்றார். அதன் பிறகு ஜெய்ப்பூரில் உள்ள ஊபெர் கோப்பையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர் நகரில் நட்ந்த 3 வது காமன்வெல்த் போட்டிகளில் கடைசி சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார். மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார். மணிக்கட்டு காயம் அவரை விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தியது. நாட்டில் முதல் வீரரான அவர் விளையாட்டின் உச்சியில் இருக்கும்போதே ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Previous stars – Aparna Popat". Tata Padukone Academy. Archived from the original on 21 May 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Mumbai Masters – Aparna Popat". Badminton India. Archived from the original on 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "Aparna Popat's Profile". Studyrays. Archived from the original on 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "Aparna Popat to train with Ganguly Prasad". The Times of India. 19 August 2001 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130814140933/http://articles.timesofindia.indiatimes.com/2001-08-19/bangalore/27227592_1_aparna-popat-badminton-physical-fitness. பார்த்த நாள்: 14 August 2013. 
  5. "No stopping Aparna". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/no-stopping-aparna/article3238731.ece. பார்த்த நாள்: 10 September 2015. 
  6. "IBL will benefit Indian players: Aparna Popat". ibnlive. 28 July 2013 இம் மூலத்தில் இருந்து 21 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130821151723/http://ibnlive.in.com/news/ibl-will-benefit-indian-players-aparna-popat/410002-5-135.html. பார்த்த நாள்: 14 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபர்னா_போப்பட்&oldid=3792860" இலிருந்து மீள்விக்கப்பட்டது